ஜஹீர் கானும் நீங்களும் ஒன்னா? இதுக்காவே தல தோனி அடிப்பாரு.. யாஷ் தயாள் பதிவை விளாசும் ரசிகர்கள்

Yash dayal
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நிறைவு பெற்றது. அதில் பெங்களூரு அணி விராட் கோலிக்கு அடுத்தபடியாக யாஷ் தயாளை மட்டும் தக்க வைத்தது. குஜராத் அணிக்காக விளையாடிய அவருக்கு எதிராக 2023 சீசனில் ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் ஐந்து சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை கொல்கத்தாவுக்கு பெற்றுக் கொடுத்தார்.

அதன் காரணமாக குஜராத் அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட பெங்களூரு அணி வாங்கியது. அந்த வாய்ப்பில் கடந்த வருடம் சென்னைக்கு எதிரான கடைசி போட்டியில் தோனியின் விக்கெட்டை எடுத்து அவர் பெங்களூரு பிளே ஆஃப் செல்வதற்கு உதவினார். குறிப்பாக கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது அவருக்கு எதிராக தோனி சிக்ஸர் அடித்தார்.

- Advertisement -

யாஷ் தயாள்:

ஆனால் அடுத்த பந்தில் தோனி அடிக்க முயற்சித்த சிக்ஸர் கேட்ச்சாக மாறியது. அப்படி தோனியின் விக்கெட்டை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் அவரை பெங்களூரு இம்முறை மீண்டும் தக்க வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் தோனியை அவுட்டாக்கிய வீடியோவை யாஷ் தயாள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதன் அருகிலேயே சில வருடங்களுக்கு முன்பாக ஜஹீர் கான் அதே சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஒரு ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக தோனியை கிட்டத்தட்ட அதே போல அவுட்டாக்கும் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். அதாவது ஜாகிர் கான் போல தாமும் தோனியை அவுட்டாக்க்கியதாக அவர் மறைமுகமாக பதிவிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் ஜாஹிர் கானும் நீங்களும் ஒன்றா என்று அவருக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:

மேலும் தோனி போன்ற ஜாம்பவான் வீரரை அவுட்டாக்கியதை இப்படி மற்றொரு ஜாம்பவானுடன் ஒப்பிடுவது முதிர்ச்சியற்ற செயல் என்றும் தயாளை ரசிகர்கள் விளாசி வருகிறார்கள். அத்துடன் இதற்காகவே அடுத்த வருடம் தோனி உங்களை சிக்ஸர்களாக அடித்து நொறுக்குவார் என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். இந்த அடுத்து சிஎஸ்கே அணியும் தோனியை 2025 சீசனில் விளையாட தக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: பும்ராவுக்கு பஞ்ச் கொடுக்க அவர் ரெடி.. இந்திய பவுலர்களை நொறுக்கி தொடரை வெல்வோம்.. கேரி உறுதியான பேட்டி

அதனால் யாஷ் தயாளை அவர் மீண்டும் எதிர்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் 42 வயதை தாண்டி விட்ட தோனி அடுத்த வருடம் ஓய்வு பெறுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர் கோப்பையை வென்று வெற்றிகரமாக தம்முடைய ஐபிஎல் கேரியரை முடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement