பும்ராவுக்கு பஞ்ச் கொடுக்க அவர் ரெடி.. இந்திய பவுலர்களை நொறுக்கி தொடரை வெல்வோம்.. கேரி உறுதியான பேட்டி

Alex Carey
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா தங்களை குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடியும் கொடுத்துள்ளது.

இதை அடுத்து அடிலெய்ட் நகரில் நடைபெறும் இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக நடைபெற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான போட்டியில் வென்று இந்தியா நல்ல உத்வேகத்தையும் பெற்றுள்ளது. முன்னதாக முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு ஆட்டநாயகன் விருது வென்ற முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

பும்ராவுக்கு பஞ்ச்:

ஆனால் 2வது போட்டியில் அவருக்கு அஞ்சாமல் திருப்பி பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணியினர் தயாராக உள்ளதாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார். குறிப்பாக அலெக்ஸ் கேரி அவரை அதிரடியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் கேரி கூறியுள்ளார். அதே போல ஹர்ஷித் ராணா, சிராஜ் போன்ற பவுலர்களையும் அதிரடியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி கேரி பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா நீண்ட வருடங்களாக சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார். எங்களுடைய உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அவரைப் போன்றவரை எதிர்கொள்ள எப்போதும் தீர்வுகளை கண்டறிவார்கள். தற்போது நாங்கள் அவரை நன்றாக அனலைஸ் செய்துள்ளோம். அதனால் இம்முறை 1, 2வது ஸ்பெல்லில் அவரை நன்றாக எதிர்கொள்வோம் என்று நம்புகிறோம்”

- Advertisement -

கேரி நம்பிக்கை:

“அதே போல பழைய பந்தில் அவரை இன்னும் நாங்கள் நன்றாக எதிர்கொள்வோம். டிராவிஸ் ஹெட் கவுன்டர் பஞ்ச் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பும்ரா மட்டுமின்றி இந்தியாவின் மற்ற பவுலர்களுக்கு எதிராகவும் நாங்கள் தகுந்த திட்டங்களை வைத்துள்ளோம். ஹெட், மார்ஷ், நான் போன்ற எங்களுடைய பேட்ஸ்மேன்கள் களத்தில் அவர்களுக்கு எதிராக வலுவான நோக்கத்துடன் விளையாடுவோம்”

இதையும் படிங்க: பழசை மறக்காமல் தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் உதவியவருக்காக பாண்டியா செய்த செயல் – விவரம் இதோ

“அது தான் எங்களுடைய ஸ்டைல். அதே சமயம் அழுத்தங்களையும் உள்வாங்கி நாங்கள் விளையாடுவதற்கு வாய்ப்பு இருக்கும். எனவே இப்போதும் நாங்கள் இந்தத் தொடரை வெல்லும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். அடிலெய்ட் மைதானத்தில் தற்போது எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் இரண்டாவது போட்டியில் கம்பேக் கொடுக்க முயற்சிக்கவுள்ள ஆஸ்திரேலியாவை போராடி வீழ்த்த இந்தியாவும் தயாராகி வருகிறது.

Advertisement