இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த 2015-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அடுத்த 2016-ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அந்தவகையில் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள், 86 ஒருநாள் போட்டிகள் மற்றும் 109 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
நன்றி மறவாத ஹார்டிக் பாண்டியா :
அதோடு இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரிலும் கடந்த ஆண்டு குஜராத் அணியிலிருந்து டிரேடிங் செய்யப்பட்ட அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி கடைசி இடத்தை பிடித்து வெளியேறி இருந்தாலும் அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் விளையாடுவார் என்று அந்த அணி உறுதி செய்துள்ளது.
ஆரம்ப கட்டத்தில் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஹார்டிக் பாண்டியா தற்போது மும்பை அணியால் 16 கோடி 35 லட்ச ரூபாய் சம்பளம் பெறும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். அதோடு இந்திய அணியிலும் முக்கிய வீரராக திகழும் அவருக்கு பல கோடி சொத்து மதிப்பு உள்ளது.
இந்நிலையில் தான் உள்ளூர் போட்டிகளில் விளையாடி கொண்டிருந்தபோது 400 ரூபாய் ஊதியமாக வழங்கி ஹார்டிக் பாண்டியாவை ஆதரித்து வந்த ஒரு செலெக்டருக்கு தற்போது அவர் தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ள செய்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் தனது ஆரம்ப கால கிரிக்கெட்டில் உதவிய அந்த நம்பரை கண்டுபிடித்த ஹார்திக் பாண்டியா :
இதையும் படிங்க : சாதகமான 2வது டெஸ்டில் இந்தியாவுக்கு நான் யார்ன்னு காமிப்பேன்.. காரணம் இது தான்.. மெக்ஸ்வீனி பேட்டி
வீடியோ காலில் அவரிடம் பேசி நீங்கள் கொடுத்த 400-500 ரூபாய் தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே மாற்றியுள்ளது. அப்போது நீங்கள் கொடுத்த அந்த பணம் எனக்கு மிக உறுதுணையாக இருந்தது. என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி என்று பழையதை மறக்காமல் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



