எல்லாம் சரிதான் ஆனால் அந்த விஷயத்தில் சூரியகுமார் சொதப்பிட்டாரு – விமர்சிக்கும் வாசிம் ஜாபருக்கு ரசிகர்கள் பதிலடி

Suryakumar YAdav wasim Jaffer
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி பைனலுக்கு கூட பெறாமல் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த தொடரில் பேட்டிங் துறையில் அதிரடி காட்ட வேண்டிய ரோகித் சர்மா – கேஎல் ராகுல் ஃபினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே சமயம் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரது சிறப்பான ஆட்டமே இந்தியாவை குறைந்தபட்சம் ஃபைனல் வரை அழைத்துச் வந்தது என்றே கூறலாம்.

குறிப்பாக உலகிலேயே அதிகமாக பவுன்ஸ் ஆகக்கூடிய பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலியே தடுமாறிய தென்னாப்பிரிக்காவின் சவாலான பந்து வீச்சுக்கு எதிராக வேறு ஏதோ பேட்டிங்க்கு சாதகமான மைதானத்தில் விளையாடுவது போல் செயல்பட்ட சூரியகுமார் யாதவ் 100 ரன்களை தாண்டுமா என்று கருதப்பட்ட இந்தியாவுக்கு 133 ரன்கள் குவிக்க உதவினார். மேலும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி போட்டியிலும் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தடுமாறிய வேளையில் அதிரடியாக விளையாடிய அவர் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

இருந்தாலும் சொதப்புறாறே:
20+ வயதில் அறிமுகமாக வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் இதே போல பெரும்பாலான போட்டிகளில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் முதல் பந்திலிருந்தே மைதானத்தின் நாலாபுறங்களிலும் சுழன்றடித்து ரன்களை குவிக்கும் அவர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இருப்பினும் இந்தியாவின் ஏபி டீ வில்லியர்ஸ் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடும் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் அதிகப்படியான அழுத்தம் கொண்ட முக்கிய போட்டிகளில் சூரியகுமார் யாதவ் சொதப்புவதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் சற்று கண்டிப்புடன் பேச வேண்டுமானால் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகளில் அவரது ஆட்டம் நமக்கு கண்டிப்பாக தேவைப்பட்டது. ஆனால் அங்கே தான் அவர் சொதப்பினார். நான் இங்கே முக்கியமான புள்ளியை மட்டுமே பேசுகிறேன். மற்றபடி இந்த தொடர் மட்டுமல்லாது இந்த வருடம் முழுவதுமே அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இந்திய பேட்டிங்கில் அவர் துருப்புச் சீட்டாக திகழ்கிறார்”

- Advertisement -

“1, 2, 3 அல்லது 5, 6 என எந்த இடமாக இருந்தாலும் சூரியகுமார் யாதவ் அசத்தினால் இந்தியாவினுடைய ஸ்கோர் 180 – 200 ரன்களாக இருக்கும். ஆனால் அவர் சொதப்பினால் இந்திய பேட்டிங்கும் சொதப்பி விடுகிறது. இது தான் இந்திய பேட்டிங்கில் அவருடைய முக்கியத்துவத்தை காட்டுகிறது” என்று கூறினார். அவர் கூறுவது உண்மை என்றாலும் அந்த 2 போட்டிகளிலும் கூட கேஎல் ராகுல் போல் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகாத சூரியகுமார் யாதவ் முறையே 15 (10), 14 (10) என குறைவான பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தார்.

அந்த வகையில் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு பாரத்தை ஏற்படுத்தாத அணுகு முறையில் விளையாடிய அவர் அனைத்து போட்டிகளிலுமே அடித்த கொடுப்பதற்கு ரோபோட் கிடையாது என்று ரசிகர்கள் வாசிம் ஜாபருக்கு பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே தடுமாறிய அவரை விட பெரும்பாலான போட்டிகளில் தடுமாறிய ரோஹித், ராகுல் ஆகியோரை பற்றி நீங்கள் பேசாதது ஏன் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரிடம் பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.

Advertisement