IND vs AUS : போய் ரூல்ஸ் படிச்சுட்டு வாங்க, விராட் கோலிக்கு தவறான அவுட் கொடுத்த அம்பயரை ஆதாரத்துடன் விளாசும் ரசிகர்கள்

Virat Kohli DRS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் முக்கியமான 2வது போட்டி பிப்ரவரி 17ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவஜா 81 ரன்களும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 72* ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்களை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட ராகுல் 17 ரன்களிலும் கேப்டன் ரோகித் சர்மா 32 ரன்களிலும் நேதன் லயன் சுழலில் சிக்கினார்கள். அப்போது தன்னுடைய 100வது போட்டியில் களமிறங்கிய புஜாராவை டக் அவுட்டாக்கிய நேதன் லயன் ஸ்ரேயாஸ் ஐயர் 4, கேஎஸ் பரத் 6 என 2 முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 66/4 என சரிந்த இந்தியாவை நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியுடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா மீட்டெடுக்க போராடினார்.

- Advertisement -

இது அவுட்டா:
மிகவும் நங்கூரமாக நின்று 5வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ரவீந்திர ஜடேஜா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் இன்றைய நாளில் தடுமாறாமல் பேட்டிங் செய்த விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 44 ரன்கள் எடுத்து அரை சதத்தை நோக்கி நெருங்கினார். ஆனால் மேத்தியூ குனேமான் வீசிய 50வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட விராட் கோலி சரியாக கணிக்க தவறி காலில் வாங்கினார்.

அதனால் ஆஸ்திரேலியா அணியினர் எல்பிடபிள்யு முறையில் அவுட் கேட்ட போது இந்தியாவைச் சேர்ந்த நடுவர் நிதின் மேனன் அவுட் கொடுத்தார். அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி ரிவ்யூ எடுத்த நிலையில் பந்து ஒரே நேரத்தில் பேட்டையும் காலையும் உரசுவது போல் ரிப்ளையில் தெரிந்ததால் அம்பயர்களும் ரசிகர்களும் குழப்பமடைந்தனர். அதனால் ஒன்றுக்கு 2 முறை சோதித்த 3வது நடுவர் எதற்கு வம்பு என்ற எண்ணத்துடன் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த முடிவை மீண்டும் பிரபலதிபலிக்கும் வகையில் அவுட் என அறிவித்தது விராட் கோலிக்கு ஆச்சரியமாக அமைந்தது.

- Advertisement -

அதனால் ஏமாற்றமடைந்த அவர் பெவிலியனுக்கு திரும்பிய பின் பந்து தன்னுடைய பேட்டில் தான் பட்டது என்பது போன்ற ரியாக்சன் கொடுத்து நடுவர்களின் முடிவு மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அது நிச்சயமாக அது அவுட்டில்லை என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் போன்றவர்களும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். அதை விட 36.2.2 எண் விதிமுறைப்படி பேட்ஸ்மேனின் கால் மற்றும் பேட்டில் ஒரே நேரத்தில் பந்து படுவது போன்ற சூழல் ஏற்படும் பட்சத்தில் பந்து முதலில் பேட்டில் படுவதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எம்சிசி விதிமுறை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதை சுட்டிக்காட்டும் ரசிகர்கள் முதலில் போய் விதிமுறைகளை படித்து விட்டு பின்னர் போட்டிக்கு நடுவராக செயல்பட வாருங்கள் என்று நித்தின் மேனன் போன்ற இந்திய அம்பயர்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: இவர் ரொம்ப வில்லங்கமான ஆளாச்சே, அஷ்வினை கண்டு பல அடி தூரம் பதுங்கிய லபுஸ்ஷேன் – நடந்தது என்ன

அப்படி முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து திண்டாடி வரும் இந்தியா 2வது நாள் தேநீர் இடைவெளியில் 179/7 என்ற ஸ்கோருடன் பேட்டிங் செய்து வருகிறது. தற்சமயத்தில் களத்தில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இந்தியாவை எப்படியாவது முன்னிலைப்படுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement