இவர் ரொம்ப வில்லங்கமான ஆளாச்சே, அஷ்வினை கண்டு பல அடி தூரம் பதுங்கிய லபுஸ்ஷேன் – நடந்தது என்ன

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த நிலைமையில் இத்தொடரின் முக்கியமான 2வது போட்டி பிப்ரவரி 17ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவஜா 81 ரன்களும் பீட்டர் ஹேன்ஸ்கோப் 72* ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து விளையாடி வரும் இந்தியா 2வது நாள் உணவு இடைவெளியில் 88/4 என்ற ஸ்கோருடன் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறது. முன்னதாக இப்போட்டியின் முதல் நாளில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான மார்னஸ் லபுஸ்ஷேனை எல்பிடபிள்யூ முறையில் 18 ரன்களில் காலி செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதே ஓவரில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட்டாக்கி மிரட்டினார். இத்தனைக்கும் இத்தொடருக்கு முன்பாக அஷ்வின் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கஸ் ஸ்பின்னரை தேடி பிடித்து இந்த இருவரும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

- Advertisement -

வில்லங்கமான அஷ்வின்:
ஆனாலும் அவர்களது திட்டங்களை தவிடு பொடியாக்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் என்றுமே போலியால் அசலை ஜெயிக்க முடியாது என்பதை நிரூபித்து உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் காலி செய்து தன்னை உலகின் நம்பர் ஒன் ஸ்பின்னர் என்பதை நிரூபித்தார். முன்னதாக இந்த போட்டியில் 18 ரன்கள் எடுத்த மார்னஸ் லபுஸ்ஷேன் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய 19வது ஓவரில் எதிர்ப்புறம் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பந்தை வீசுவதற்கு சென்ற அஷ்வின் பந்தை வீசுவது போல் சென்றாலும் பந்தை வெளியே விடாமல் மார்னஸ் லபுஸ்ஷேன் எந்த இடத்தில் நிற்கிறார் என்பதை பார்த்தார். ஒருவேளை வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே இருந்தால் மன்கட் ரன் அவுட் செய்யலாம் என்ற எண்ணத்துடன் அவர் பார்த்த போது மார்னஸ் லபுஸ்ஷேன் கோட்டுக்கு உள்ளே இருந்ததால் அந்த சமயத்தில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை.

- Advertisement -

ஆனால் அந்த தருணத்திற்கு பின் “இவரா இவர் மன்கட் செய்வதில் வில்லங்கமான ஆளாச்சே” என்ற வகையில் அடுத்த பந்து வீசுவதற்கு முன்பாக மார்னஸ் லபுஸ்ஷேன் வெள்ளை கோட்டுக்கு உள்ளே பல அடி தூரங்கள் உள்ளே சென்று ஸ்டம்ப்களுக்கு பின்னால் பத்திரமாக பதுங்கி நின்று கொண்டார். அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை பந்து வீசாமலேயே அச்சுறுத்துவதற்கு உங்களால் மட்டுமே முடியும் என்று அஸ்வினை சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள்.

முன்னதாக பவுலர்கள் மட்டும் வெள்ளை கோட்டுக்கு ஒரு இன்ச் காலை வெளியே வைத்து போட்டாலும் உடனடியாக நோ-பால் தண்டனையாக வழங்கப்படும் நிலையில் பேட்ஸ்மேன்கள் மட்டும் பந்து வீசுவதற்கு முன்பாக பல அடி தூரங்கள் வெளியே செல்வது எந்த வகையில் நியாயம்? என்ற கோட்பாட்டுடன் 2019 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை மன்கட் செய்த அஷ்வின் அதை உலகின் அனைத்து பந்து வீச்சாளர்களும் செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: IND vs AUS : 2வது டெஸ்டில் பாதியுடன் விலகிய டேவிட் வார்னர், காரணம் என்ன? மாற்று வீரர் யார் – முழுவிவரம் இதோ

அத்துடன் அதற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர் கடந்த வருடம் மன்கட் அவுட்டை நேர்மைக்கு புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு எம்சிசி மற்றும் ஐசிசி அமைப்புகள் மாற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம். அதனால் இப்போதெல்லாம் உலகில் எங்கு மன்கட் வகையில் ரன் அவுட் செய்தாலும் ட்விட்டரில் அஸ்வின் பெயர் தான் ட்ரெண்டிங் ஆகும். அந்தளவுக்கு அடிப்படை விதிமுறையே மாற்றியமைத்த காரணத்தாலேயே அஷ்வின் எச்சரிக்கை விடுத்ததும் மார்னஸ் லபுஸ்ஷேன் பல அடி தூரங்கள் உள்ளே சென்று நின்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement