ஸ்டீவ் ஸ்மித் செய்த அதே மட்டமான வேலை.. மீண்டும் மும்பைக்கு ஆதாரவாக அம்பயர்கள் வழங்கிய 2 தீர்ப்புகள்?

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி முல்லான்பூரில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை சூரியகுமார் யாதவ் 78, ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்த உதவியுடன் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய மும்பைக்கு சாம் கரண் 6, ரிலீ ரோசவ் 1, லிவிங்ஸ்டன் 1, ஜிதேஷ் சர்மா 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் கடைசியில் சசாங் சிங் 41, அசுடோஸ் சர்மா 61 ரன்கள் எடுத்தும் பஞ்சாப்பை 183 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி, பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக பெங்களூருக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை அணிக்கு சில தருணங்களில் நடுவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் கொதிப்பு:
அதே போல இப்போட்டியில் 15வது ஓவரில் சூரியகுமார் யாதவுக்கு எதிராக 5வது பந்தில் அர்ஷிதீப் சிங் ஒய்ட் யார்கர் வீசினார். அப்போது களத்தில் இருந்த நடுவர் ஒய்ட் கொடுக்கவில்லை. ஆனால் அப்போது பெவிலியனில் இருந்த பொல்லார்ட், மார்க் பவுன்சர், டி. டேவிட் உள்ளிட்ட மும்பை அணியினர் ரிவியூ எடுக்குமாறு சூரியகுமாரிடம் சைகை செய்து சிக்னல் கொடுத்தனர்.

அதைக் கேட்டு சூரியகுமார் ரிவியூ எடுத்ததை தொடர்ந்து நடுவர் ஒயிட் வழங்கினார். குறிப்பாக 2017 டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் பெவிலியனில் இருந்த தமது ஆஸ்திரேலிய அணியிடம் கேட்டு விட்டு எல்பிடபுள்யூ ரிவியூ எடுத்தார். அதற்கு விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தியதை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. கிட்டத்தட்ட அதே போல அந்த இடத்தில் மும்பை அணியினர் சொன்ன கொண்ட பின் சூரியகுமார் ரிவியூ எடுத்ததால் அதை ஏற்கக் கூடாது என பஞ்சாப் கேப்டன் சாம் கரண் நடுவரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஆனால் அதையெல்லாம் மதிக்காத நடுவர் ரிவியூ எடுத்ததால் கடைசியில் மும்பைக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. அதே போல 19வது ஓவரில் சாம் கரண் வீசிய ஒரு பந்தை டிம் டேவிட் அடிக்காமல் விட்டார். அது விக்கெட் கீப்பரின் கையில் சென்ற நிலையில் நடுவர் ஒய்ட் கொடுக்கவில்லை. ஆனால் அதை டிம் டேவிட் ரிவியூ செய்தார். அதை சோதித்த போது அவருடைய பேட்டுக்கு கீழே பந்து சென்றது நன்றாக தெரிந்தது.

இதையும் படிங்க: இப்படி ஒரு ஆட்டத்தை ஆடி கடைசில நாங்க தோத்தது ரொம்பவே கஷ்டமா இருக்கு – சாம் கரண் வருத்தம்

ஆனால் அது ஒய்ட் என்று 3வது நடுவர் நித்தின் மேனன் மும்பைக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கினார். அந்த 2 தீர்ப்புகள் சிறியது என்றாலும் சரியாக வழங்கியிருந்தால் வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்யப்பட்ட இப்போட்டியின் வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால் மீண்டும் நடுவர்கள் மீது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement