- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நீங்கல்லாம் பேடிஎம், ஐபிஎல் ஜெயிக்க தான் லாய்க்கி – 2014 முதல் சொதப்பும் நம்பர் ஒன் இந்தியா, வேதனையில் விளாசும் ரசிகர்கள்

இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா மெகா வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியா மெகா தோல்வியை சந்தித்து மீண்டும் ஐசிசி தொடரிலிருந்து வெறும் கையுடன் வெளியேறியுள்ளது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கடைசியாக இதே இங்கிலாந்து மண்ணில் கடந்த 2013ஆம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஃபைனலில் இலங்கையிடம் தோற்று 2015 உலகக் கோப்பையில் இதே ஆஸ்திரேலியாவிடம் செமி ஃபைனலில் தோற்று வெளியேறியது. அத்துடன் 2016 டி20 உலக கோப்பையில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸிடம் செமி ஃபைனலில் தோற்று வெளியேறிய இந்தியா 2017இல் ஒரு படி மேலே சென்று புதிதாக பொறுப்பேற்ற விராட் கோலித் தலைமையில் பரம எதரி பாகிஸ்தானிடம் ஃபைனலில் மண்ணை கவ்வி பெரிய அவமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ரசிகர்கள் வேதனை:
அப்போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது தோல்விக்கு காரணமாக அமைந்ததைப் போலவே 2019 உலகக்கோப்பையில் மீண்டும் இதே இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது தோனி – ஜடேஜாவின் போராட்டத்தையும் தாண்டி மறக்க முடியாத தோல்வியை கொடுத்தது. அத்துடன் 2021ஆம் ஆண்டு இதே இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்ற இந்தியா டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.

அப்படி கடந்த 10 வருடங்களில் திறமை இருந்தும் சரியான வீரர்களை தேர்வு செய்யாமல் முக்கிய நேரத்தில் சொதப்பிய இந்தியா இம்முறையும் அதிலிருந்து கொஞ்சமும் பாடத்தை கற்காமல் தோற்றது என்றே சொல்லலாம். எடுத்துக்காட்டாக இப்போட்டியில் டாஸ் வென்றும் முதல் நாள் மட்டும் மேகமூட்டத்துடன் இருந்த வானிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்யாமல் மோசமாக பந்து வீசிய இந்தியாவுக்கு மீண்டும் ரோஹித், விராட், புஜாரா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே 2வது இன்னிங்ஸில் 50 ரன்கள் கூட தொடாமல் சொதுப்பியது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

அதை விட ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி உலக சாதனை படைத்து தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை இப்போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக இருந்தும் தேர்வு செய்யாத அணி நிர்வாகத்தின் முடிவு தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அது போக சமீபத்திய ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் 4 ஓவர்களுடன் வீசி விட்டு ஒரு வாரம் இடைவெளியில் பயிற்சி போட்டியில் கூட விளையாடாமல் நேரடியாக களமிறங்கியதால் பெரும்பாலான இந்திய பவுலர்கள் திடீரென இப்போட்டியில் 17 ஓவர்களை வீசி சோர்வடைந்து ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்தது.

மொத்தத்தில் கடந்த ஃபைனல் உட்பட கடந்த 9 வருடங்களில் செய்த தவறுகளிலிருந்து எந்த பாடத்தையும் கற்காத இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி நாக் அவுட் போட்டியில் தோற்றுள்ளது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. இத்தனைக்கும் ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை இருதரப்பு தொடரில் அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியும் இந்த முக்கியமான ஃபைனலில் இந்தியாவால் வெல்ல முடியவில்லை.

இதையும் படிங்க:WTC Final : இந்தியாவை பெட்டிப் பாம்பாக அடக்கி டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்த ஆஸி – தோல்விக்கான காரணம் இதோ

அதனால் உச்சகட்ட விரக்தியில் மூழ்கியுள்ள இந்திய ரசிகர்கள் நீங்கள் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிராக சாதாரண இரு தரப்பு தொடர்களில் மட்டும் வென்று ஐசிசி தரவரிசையில் ஒன்றுக்கும் உபயோகமில்லாத நம்பர் ஒன் இடத்தை பிடிக்க மட்டுமே சரியானவர்கள் என்று இந்திய அணியை விமர்சிக்கின்றனர். அதை விட இந்த ஃபைனலுக்கு முழுமையாக தயாராகாமல் களமிறங்கியது தோல்வியை கொடுத்ததால் உங்களுக்கு இந்தியாவை விட ஐபிஎல் எனும் பணம் தான் முக்கியம் அந்த கோப்பை மட்டுமே வெல்வதற்கு லாய்க்கி என பிசிசிஐ’யையும் ரசிகர்கள் விளாசுகின்றனர்.

- Advertisement -
Published by