IND vs ENG : 45 சொதப்பல்களுக்கு மீண்டும் வாய்ப்பு, ஒரு அசத்தலுக்கு ஏன் வாய்ப்பில்லை – தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

IND vs RSA Pant Chahal
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்கியது. கடந்த வருடம் ஜோ ரூட் மற்றும் விராட் கோலி தலைமையில் இவ்விரு அணிகளும் மோதிக் கொண்டதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெறுகிறது. இப்போட்டியில் வென்று 15 வருடங்களுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவும் அதற்கு சவாலாக நின்று வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்தும் போராட உள்ளன.

வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கு பின்பு ஒருநாள் இடைவெளியில் அதாவது ஜூலை 7-ஆம் தேதி துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மீண்டும் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சந்திக்கும் இந்தியா ஜூலை 12இல் துவங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறது. எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான இங்கிலாந்தை இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் தோற்கடித்து வெற்றி பெற இந்தியா முயற்சிக்க உள்ளது.

- Advertisement -

திரும்பும் ரோஹித்:
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் முக்கிய அம்சமாக பர்மிங்காமில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு விலகிய கேப்டன் ரோகித் சர்மா குணமடைந்து கேப்டனாக செயல்பட உள்ளார். இருப்பினும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விட்டு உடனடியாக ஒருநாள் இடைவெளியில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் டி20 அணிக்கு திரும்ப முடியாது என்ற காரணத்தால் சமீபத்திய அயர்லாந்து தொடரில் பங்கேற்ற அத்தனை வீரர்களும் ஜூலை 7-ஆம் தேதி துவங்கும் முதல் போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அதன்பின் ஜூலை 10, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் எஞ்சிய 2 டி20 போட்டிகளுக்கு விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ருதுராஜ் கைக்வாட், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயர், அர்ஷிதீப் சிங் ஆகிய வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

அத்துடன் ஜூலை 12, 14, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கும் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் கடைசி 2 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்களுடன் ஷிகர் தவான், ஷார்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, முகமத் ஷமி, முகமத் சிராஜ், அர்ஷிதீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

45 சொதப்பல்கள்:
ஆனால் இந்த அறிவிப்பில் டி20 அணியில் மீண்டும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளது பல ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏனெனில் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவின் இடத்தில் பொறுப்புடன் விளையாட வேண்டிய அவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் மொத்தமாக சொதப்பினார்.

- Advertisement -

அதுவும் 4 போட்டிகளில் சொல்லி வைத்தார்போல் தென் ஆப்பிரிக்கா விரித்த அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் வலையில் தொடர்ச்சியாக அவுட்டான அவர் கொஞ்சம் கூட பேட்டிங்கில் முன்னேறவில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் விமர்சனத்திற்கு உள்ளானார். அந்த தொடர் மட்டுமல்லாது இதுவரை 48 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 741 ரன்களை 23.16 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார்.

3 போட்டிகளில் மட்டுமே அரை சதமடித்துள்ளார். அப்படி 90% போட்டிகளில் அதாவது போட்டிகளில் 45 தருணங்களில் அரை சதமடிக்காமல் சொதப்பி வரும் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ள பிசிசிஐ நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த வாய்ப்பில் அயர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் அரை சதமடித்து 77 (42) ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு ஏன் முழு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர். ஏனெனில் கடந்த 2015இல் முதல் முறையாக அறிமுகமான அவருக்கு கடந்த 6 வருடங்களில் வெறும் 13 போட்டிகளில் மட்டுமே தொடர்ச்சியற்ற வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

- Advertisement -

ரிட்டையர் ஆகலாம்:
அதில் அரை சதம் கூட அடிக்கவில்லை என்ற அற்ப காரணத்தைக் காட்டி கழற்றிவிட்டு வந்த தேர்வுக்குழு தற்போது ஐபிஎல் 2022 தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து ஜாம்பவான் வார்னேவுக்கு பின்பு ராஜஸ்தானை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதால் கிடைத்த வாய்ப்பில் 77 (42) ரன்கள் விளாசிய சஞ்சு சாம்சன் தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்த போதிலும் மீண்டும் சீனியர்கள் அணிக்குள் வருகிறார்கள் என்ற காரணத்துக்காக முதல் போட்டியில் மட்டும் வாய்ப்பளித்துவிட்டு கழற்றி விட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG : அவருக்கும் கேப்டன்ஷிப் அனுபவமில்ல ஆனால் கப் வாங்குனாரு, அவரை பாலோ செய்யபோகிறேன் – பும்ரா ஓப்பன்டாக்

அதனால் பேசாம ரிடையராகி வெளிநாட்டுக்கு விளையாடலாம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் ரசிகர்கள் இதுபோக ராகுல் திரிபாதி, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கும் நியாயமான வாய்ப்பு கிடைக்காததால் சமூக வலைதளங்களில் கோபத்துடன் காணப்படும் ரசிகர்கள் இந்திய தேர்வு குழுவினரை சரமாரியாக விமர்சித்து வருகின்றார்கள்.

Advertisement