என்ன திமிர் ! எதுவுமே சாதிக்கல, அதற்குள் அறிவுரை வழங்கிய ஜாம்பவானை உதாசீனப்படுத்திய இளம் வீரர், ரசிகர்கள் கோபம்

Riyan Parag 56.jpeg
- Advertisement -

பொதுவாக வயது குறைவான இளசுகளுக்கு அனுபவத்தை கற்றறிந்த மூத்தவர்கள் அறிவுரை கூறினால் பிடிக்காது என்று கூறுவார்கள். அது போன்றதொரு நிகழ்வு தற்போதைய ஐபிஎல் 2022 தொடரில் நடைபெற்றுள்ளதை பற்றி பார்ப்போம். இந்த தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. தற்போதைய நிலைமையில் எஞ்சிய போட்டியில் தோல்வி அடைந்தாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அதிகபிரசங்கி பராக்:
அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கான தேடலில் தனது 13-ஆவது போட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லக்னோவை எதிர்கொண்ட ராஜஸ்தான் 24 ரன்கள் வித்யாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் 19-வது ஓவரை எதிர்கொண்ட மர்கஸ் ஸ்டாய்நிஸ் தனது அணியின் வெற்றிக்காக சிக்சரை பறக்க விட முயன்ற போது அது ராஜஸ்தானுக்காக விளையாடும் 20 வயது அசாம் இளம் வீரர் ரியான் பராக்கிடம் கேட்ச்சாக சென்றது.

அதை முடிந்த அளவுக்கு தரையோடு தரையாக ரியன் பராக் பிடித்த போதிலும் பந்து லேசாக தரையை உரசியதால் அம்பயர்கள் அவுட் கொடுக்கவில்லை. அதனால் அவர் அதிருப்தியடைந்திருந்த நிலையில் அடுத்த ஓவரில் மீண்டும் ஸ்டாய்நிஸ் சிக்ஸர் அடிக்க முயன்ற நிலையில் அந்த பந்து மீண்டும் அதே ரியன் பராக்கிடம் சென்றது. அந்த முறை கச்சிதமாக கேட்ச் பிடித்த ரியான் பராக் அதற்கு முந்தைய தருணத்தில் அவுட்டில்லை என தெரிவித்த அம்பயர்களை கலாய்க்கும் வகையில் தரையில் அமர்ந்து பந்தை தரையில் தொட்டு தொட்டு காண்பித்து சைகை செய்து கொண்டாடினார்.

ஹைடன் அறிவுரை:
ஆனால் அதற்கு முந்தைய தருணத்தில் அம்பயர்கள் சரியான தீர்ப்பையே வழங்கியிருந்த நிலையில் என்னமோ அவர்கள் அநியாயமாக தீர்ப்பு வழங்கியதை போல 2-வது முறையாக சரியாக கேட்ச் பிடித்த போது ரியன் பரக் கொண்டாடியதை பார்த்த பலரும் அதிருப்தியடைந்தனர். அவரின் அந்த செயல்பாடு அம்பயர்களை கலாய்க்கும் வகையில் இருந்ததால் போட்டியின் முடிவில் அம்பயர்கள் அபராதமாக விதிக்கும் அளவுக்கு அவர் நடந்துகொண்டார். அதனால் இந்த இளம் வயதில் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்ற வகையில் அந்த போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹைடன் அறிவுரை வழங்கினார்.

- Advertisement -

அவர் கூறியது பின்வருமாறு. “இளம் மனிதரே, உனக்கு ஒரு அறிவுரை வைத்திருக்கிறேன். கிரிக்கெட் என்பது மிகமிக நீண்ட விளையாட்டு என்பதால் அதில் உங்களுக்கு நிறைய நல்ல நினைவுகள் வந்து சேரும். எனவே விதியை ஒருபோதும் சோதிக்க வேண்டாம். ஏனெனில் உங்களைச் சுற்றியே இருப்பதால் விரைவாக வந்து விடும்” என்று கூறினார். அதாவது இந்த இளம் வயதில் இது போன்ற ஒருசில சிறிய வெற்றிகளை அதிகப் பிரசங்கித்தனமாக கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட மேத்யூ ஹெய்டன் இளம் வீரராக இருக்கும் நீங்கள் நீண்ட காலம் விளையாடும்போது கொண்டாடுதற்கு தாமாகவே நல்ல நினைவுகளும் வெற்றிகளும் வந்து சேரும் என்று தெரிவித்தார்.

எனவே அதுவரை சிறப்பாக விளையாடி பெரிய நிலையை எட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமே தவிர இதுபோன்ற அற்ப வெற்றிக்காக மற்றவர்களை கலாய்க்க வேண்டாம் ஏனெனில் விரைவில் உங்களை ஒருவர் கலாய்க்கும் நிலைமை நடந்தேறலாம் என்று அக்கறையுடன் அறிவுரை கொடுத்தார். ஹைடனின் அந்த அறிவுரைக்கு அவருடன் வர்ணனை செய்து கொண்டிருந்த மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் “நீங்கள் சொல்வதை வருங்காலம் தான் நிர்ணயிக்கும்” என்று பதிலளித்து ரியன் பராக் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

என்ன திமிர்:
இந்நிலையில் ஜாம்பவான்களின் அறிவுரைகளால் கடுப்பான ரியான் பராக் அவர்களை மறைமுகமாக சாடும் வகையில் தனது டுவிட்டரில். “20 வருடங்களில் மகிழ்ச்சி அடைவதற்கு நிறைய இருப்பதால் யாரும் எதைப்பற்றியும் கவலைப்பட போவதில்லை, மகிழ்ச்சியடைய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். பொதுவாகவே களத்திலும் ட்விட்டரிலும் அதிகப் பிரசங்கித் தனமாக வேலைகளை செய்து திமிராகப் பேசும் அவரின் இந்த பதிவு ஹெய்டன் மற்றும் பிஷப் ஆகிய ஜாம்பவான்கள் கொடுத்த அறிவுரைக்கானது தான் என்று ரசிகர்கள் கண்டு பிடித்தனர். அதனால் பெரும்பாலான ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் அவரை பதிலுக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க : தோற்றாலும் வீழாத தமிழன் ! மும்பைக்கு தோல்வியை பரிசளித்த நடராஜன், ஹைதராபாத் திரில் வெற்றி – நடந்தது இதோ

ஏனெனில் 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதுவரை பெரிய அளவில் எதுவும் சாதிக்க நிலையில் ஜாம்பவான்கள் சொல்வதில் இருக்கும் நன்மையை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களையே திருப்பி கலாய்ப்பதா என்று பல ரசிகர்கள் கோபத்துடன் திட்டி வருகின்றனர். இத்தனைக்கும் இந்த வருடம் இதுவரை 13 போட்டிகளில் வெறும் 154 ரன்களை 17.11 என்ற மோசமான சராசரியில் எடுத்து வரும் அவர் டுவிட்டரில் கவனம் செலுத்தாமல் முதலில் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் காரமாக அவருக்கு பதிலளித்துள்ளனர்.

Advertisement