IPL 2023 : மகத்தான நீங்க இப்டி செய்யலாமா? முக்கிய முடிவில் சொதப்பிய கங்குலி, பாண்டிங் – பதவி விலகுமாறு விளாசும் ரசிகர்கள்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற 40வது லீக் போட்டியில் டெல்லியை 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஹைதராபாத் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 197/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 67 (36) ரன்களும் ஹென்றிச் க்ளாஸென் 53* (27) ரன்களும் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 198 ரன்களை துரத்திய புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் டக் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து வந்த மிட்சேல் மார்ஷ் உடன் சேர்ந்து அதிரடியாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட் 2வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் மெகா பார்ட்னர்சிப் அமைத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து 9 பவுண்டரியுடன் 59 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே பொறுப்பின்றி 1 (3) ரன்னில் அவுட்டாகி சென்ற நிலையில் மறுபுறம் 1 பவுண்டரி 6 சிக்ஸரை பறக்க விட்டு அதிரடியாக போராடிய மிட்சேல் மார்ஷ் 63 (39) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
அப்போது கையிலிருந்த டெல்லியின் வெற்றி அடுத்து வந்த பிரியம் கார்க் 12 (9) சர்ப்ராஸ் கான் 9 (10) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் பறிபோனது. ஏனெனில் அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் ரன் ரேட் எகிறிய நிலையில் 16வது ஓவரில் களமிறங்கி அக்சர் படேல் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 29* (14) ரன்களும் ரிபல் படேல் 11* (9) ரன்களும் எடுத்து போராடியும் 20 ஓவர்களில் டெல்லி 20 ஓவரில் 188/6 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.

இதனால் 8 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்த டெல்லி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளதால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. அதை விட இந்த சீசனில் டெல்லி அணியில் ஆரம்பம் முதலே பிரிதிவி ஷா, மனிஷ் பாண்டே உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாற்றமாக செயல்பட்டு வரும் நிலையில் டேவிட் வார்னரும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் நிலையில் அக்சர் படேல் மட்டுமே எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் அதிரடியாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

தற்சமத்தில் அற்புதமான ஃபார்மில் இருக்கும் அவர் இப்போட்டியில் 26 பந்துகள் மீதமிருந்த நிலையில் மட்டுமே களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று 207.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். ஒருவேளை ஃ பார்மை இழந்து கடந்த பல வருடங்களாக 100க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் திண்டாட்டமாக செயல்பட்டு வரும் மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக அவர் களமிறங்கும் வாய்ப்பை பெற்றிருந்தால் நிச்சயமாக முன்கூட்டியே நன்கு செட்டிலாகி இன்னும் அதிரடியாக விளையாடி வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பார்.

அதுவும் இல்லையென்றால் கூட பிரியம் கார்க் போன்ற அனுபவமற்ற இளம் வீரருக்கு பதிலாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றிருந்தால் நிச்சயமாக அவர் வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார். அதை செய்யாத டெல்லி அணி நிர்வாகம் நல்ல ஃபார்மில் இருப்பவர் கடைசியில் களமிறங்கி ஃபினிஷராக செயல்படுவார் என்ற எண்ணத்துடன் 7வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் என்ன தான் நல்ல ஃபார்மில் இருந்தாலும் தோனி, ஏபி டீ வில்லியர்ஸ் கூட அதிகப்படியான அழுத்தம் மற்றும் ரன்ரேட் இருந்தால் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலையில் வரலாற்றின் மகத்தான கேப்டன்களாக கருதப்படும் ரிக்கி பாண்டிங் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் டெல்லி அணியின் பயிற்சியாளர்களாக இருந்தும் சூழ்நிலைக்கேற்றார் போல் அந்த முடிவை கூட மாற்றி எடுக்காமல் சொதப்பியது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. முன்னதாக இதே சீசனில் டெல்லி விளையாடிய பகல் நேர போட்டியில் டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க:DC vs SRH : மீண்டும் மீண்டும் அதே தவறு. சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – டேவிட் வார்னர் வருத்தம்

அப்படி இந்த சிறுசிறு முடிவுகளில் கூட சொதப்பும் பாண்டிங் மற்றும் கங்குலி ஆகியோர் இதுவரை வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தால் பதவி விலகும் நேரம் வந்து விட்டதாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement