DC vs SRH : மீண்டும் மீண்டும் அதே தவறு. சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – டேவிட் வார்னர் வருத்தம்

David-Warner
- Advertisement -

டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணியானது ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

SRH vs DC

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக துவக்க வீரர் அபிஷேக் சர்மா 67 ரன்களையும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கிளாசன் 53 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் குவித்ததால் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது :

DC vs SRH 2

இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். மிட்சல் மார்ஷ் அற்புதமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய போட்டியில் அவரே எங்களது சிறந்த பவுலராகவும் இருந்தார். இருந்தாலும் இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது.

- Advertisement -

நாங்கள் மீண்டும் மீண்டும் பேட்டிங்கில் தவறு செய்து வருகிறோம். இந்த பிட்சில் பந்து ஸ்லோவாக வந்ததாக தெரியவில்லை இருந்தாலும் எங்களின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் ரன்களை குவிக்க முடியவில்லை.

இதையும் படிங்க : SRH vs DC : டெல்லி அணிக்கெதிரான இந்த வெற்றிக்கு இவர்கள் 2 பேர்தான் காரணம் – எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி

அக்சர் பட்டேல் நல்ல டச்சில் இருக்கிறார். அவர் எங்கள் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். நல்ல துவக்கம் கிடைத்தும், இறுதியில் அக்சர் பட்டேல் அணியை கொண்டு சென்றாலும் சிறிய இடைவெளியில் போட்டியை தோற்றுவிட்டது வருத்தம் அளிக்கிறது என டேவிட் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement