SRH vs DC : டெல்லி அணிக்கெதிரான இந்த வெற்றிக்கு இவர்கள் 2 பேர்தான் காரணம் – எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி

Markram
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40-ஆவது லீக் போட்டியானது நேற்று இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

SRH vs DC

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக அபிஷேக் சர்மா 67 ரன்களையும், ஹென்ரிச் கிளாசன் 53 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றியின் இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

Klassen

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றிக்கு பிறகு பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் : ஒரு அணியாக எங்களுடைய முயற்சி மிகச் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களது திறனை இந்த போட்டியில் வெளிக்காட்டினார். எந்த ஒரு இடத்திலும் நாங்கள் தவறு செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இருந்தாலும் இந்த முடிவிற்கு காரணம் இரண்டு வீரர்கள் தான். அபிஷேக் ஷர்மா போட்டியின் ஆரம்பத்திலேயே மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து விளையாடி அணியை கொண்டு சென்றார். அதேபோன்று பின்வரிசையில் கிளாசன் மிகச் சிறப்பாக ஆடி பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க : IPL 2023 : எவ்ளோ தான் தோக்குறது, 13 மேட்ச் சான்ஸ் கொடுத்ததும் அடிக்கல அதான் கழற்றி விட்டோம் – இளம் வீரரை விளாசிய பாண்டிங்

கிளாசன் மீண்டும் இதேபோன்று அதிரடியாக விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பிற்பகுதியில் பந்துவீச்சாளர்களும் மிக அருமையாக செயல்பட்டு வெற்றிக்கு அழைத்துச் சென்றனர் என மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement