
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி துவங்கும் அந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான அணி விளையாட உள்ளது. அந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
ஏனெனில் சுப்மன் கில்லை விட அவர்கள் இருவருமே டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் திறமையுடையவர்கள். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்று கடந்த சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். மேலும் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்து இந்தியாவை கோப்பை வெல்ல உதவினர்.
ஆனால் ஆசிய கோப்பையில் அவருக்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. அது ஒரு புறமிருக்க வேகப்பந்து வீச்சுத் துறையில் ஹர்ஷித் ராணா எதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்? என்பது ரசிகர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஏனெனில் ஐபிஎல் 2024 தொடரில்ர் கொல்கத்தா அணியில் கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அவர் கோப்பையை வெல்ல உதவினார்.
அதனால் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி 3 விக்கெட்டுகளை 8.25 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்தார். கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அறிமுகமான அவரை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினார்கள். அந்த சூழ்நிலையில் கடந்த 2025 ஐபிஎல் தொடரில் ராணா 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை 10.18 எக்கனாமியில் எடுத்து சுமாராகவே பவுலிங் செய்தார்.
அப்படி கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் சுமாராக விளையாடிய ராணா ஆசிய கோப்பையில் தேர்வாகியுள்ளார். அதற்கு கௌதம் கம்பீர் தான் முழுமையான காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் வெறும் ஒரு ஐபிஎல் (2024) தொடரில் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினர் என்பதற்காக அவரை கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் இந்திய அணியில் அறிமுகப்படுத்தினார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயத்தால் முக்கிய வாய்ப்பை இழந்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ
அந்த வாய்ப்பில் சுமாராக விளையாடிய ராணாவை கம்பீர் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினும் 2023 ஆசியக் கோப்பை ஃபைனலில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் ஒரு மாத ஓய்வுக்குப்பின் ஆசிய கோப்பையில் அவரை தேர்ந்தெடுக்காத கௌதம் கம்பீர் தன்னுடைய சொந்த விருப்பத்திற்காக ராணாவை தேர்ந்தெடுத்துள்ளது கிரிக்கெட்டின் அரசியல் என்று ரசிகர்கள் சாடுகின்றனர்.