IND vs WI : 2024 டி20 உ.கோ தோல்விக்கு முன்னோட்டமா? 2 மோசமான கேப்டன்ஷிப் தவறால் வெற்றியை தாரை வார்த்த பாண்டியா – ரசிகர்கள் கொதிப்பு

Hardik Pandya Chahal
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கி கோப்பையை வெல்ல எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயப்படுத்தி தள்ளப்பட்டுள்ளது. 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் இத்தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியிலேயே வெறும் 150 ரன்கள் துரத்த முடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அந்த நிலைமையில் கயானாவில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா மீண்டும் சுமாராகவே செயல்பட்டு வெறும் 152/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக இஷான் கிசான் 27, சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 1, சஞ்சு சாம்சன் 7, ஹர்திக் பாண்டியா 24 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக இளம் வீரர் திலக் வர்மா 51 (41) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப், அகில் ஹொசைன், ரொமாரியா செஃபார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

சொதப்பல் கேப்டன்ஷிப்:
அதை தொடர்ந்து 153 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு முதல் ஓவரிலேயே ப்ரெண்டன் கிங் 0, ஜான்சன் சார்லஸ் 2 என 2 முக்கிய பேட்ஸ்மேன்களை ஹர்திக் பாண்டியா ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கினார். போதாகுறைக்கு மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த கெய்ல் மேயர்ஸ் 15 (7) ரன்னில் அர்ஷிதீப் வேகத்தில் அவுட்டானதால் 32/3 என தடுமாறிய அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி 50 ரன்கள் கடந்து வெற்றிக்கு போராடினார்.

ஆனால் மறுபுறம் நின்ற கேப்டன் ரோவ்மன் போவலை 21 (19) ரன்னில் சரியான நேரத்தில் பாண்டியா அவுட்டாக்கிய நிலையில் மறுபுறம் கிட்டத்தட்ட வெற்றியைப் படுத்த நிக்கோலஸ் பூரான் 67 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 126/5 என்ற நல்ல நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு சஹால் வீசிய 16வது ஓவரில் ரோமாரியா செஃபார்ட் 0 ரன்களில் ரன் அவுட்டாகி சென்றதால் போட்டியில் திருப்பு முனை ஏற்பட்டது. ஏனெனில் அதை அப்படியே பிடித்த சஹால் அதே ஓவரில் ஜேசன் ஹோல்டர் 0, ஹெட்மயர் 22 (22) என 2 அதிரடி வீரர்களை அவுட்டாக்கி வெற்றியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார்.

- Advertisement -

அப்படி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் அடுத்த ஓவரில் முகேஷ் குமார் 3 ரன் மட்டுமே கொடுத்ததால் வெஸ்ட் இண்டீஸ் அழுத்தத்தில் தடுமாறியது. ஆனால் அப்போது 3 ஓவர்களை மட்டுமே வீசி தன்னுடைய 4வது ஓவரை வீசுவதற்காக காத்திருந்த சஹாலுக்கு 18வது ஓவரை கொடுக்காத கேப்டன் ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப்புக்கு கொடுத்தார்.

அதில் அவர் 8 ரன்கள் கொடுத்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அப்போதாவது 19வது ஓவரை சஹாலுக்கு கொடுக்க வேண்டிய ஹர்திக் பாண்டியா அப்போதும் அதை செய்யாமல் முகேஷ் குமாருக்கு கொடுத்தார். அதை பயன்படுத்திய அகில் ஹொசைன் 16* (10) ரன்களும் அல்சாரி ஜோசப் 10* (8) ரன்களும் எடுத்து எளிதாக 18.5 ஓவரிலேயே தங்கள் அணிக்கு 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று கொடுத்தனர்.

- Advertisement -

அப்படி பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் 16வது ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து திருப்பு முனையை உண்டாக்கிய சஹாலுக்கு எஞ்சிய 1 ஓவரை பாண்டியா வழங்காதது போராடிக் கொண்டு வந்த இந்தியாவின் வெற்றியை மீண்டும் தாரை வார்க்கும் வகையில் அமைந்தது. அதை விட மற்றொரு ஸ்பின்னரான அக்சர் படேலுக்கும் பாண்டியா இப்போட்டி முழுவதும் 1 ஓவர் கூட ஏன் வழங்கவில்லை என்பதும் ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

இதையும் படிங்க:IND vs WI : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்துவது – இதுவே முதல்முறையாம்

இப்படி அடுத்தடுத்த சொதப்பலால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் தோற்ற முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையும் பாண்டியா படைத்துள்ளார். மொத்தத்தில் இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2024 டி20 உலக கோப்பையில் வேக்கன்ஷிப் செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் பாண்டியா அதற்கு முன்னோட்டமாக இப்படி சொதப்பல் முடிவுகளை எடுத்து இந்தியாவின் வெற்றியை தாரை வார்த்ததாக ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement