- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி எப்போவும் தல தான்.. அப்போ போன மாசம் சொன்னது பொய்யா? ஹர்பஜனை விளாசும் ரசிகர்கள்.. காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வரலாற்றின் மகத்தான வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக உலக சாதனை படைத்துள்ள அவருடைய தலைமையில் இந்தியா நம்பர் ஒன் டெஸ்ட் இடத்தையும் பிடித்தது. மேலும் 5 ஐபிஎல் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை வென்ற தோனி வரலாற்றின் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.

ஆனால் அப்படிப்பட்ட அவர் தம்மிடம் பேசி 10 வருடங்கள் ஆயிற்று என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார். தாம் பேச விரும்பியும் தோனி தம்மிடம் பேச விரும்பவில்லை என்று ஹர்பஜன் கூறியிருந்தார். அத்துடன் மொபைலில் அழைத்தாலும் தோனி அதை எடுப்பதில்லை என்பதால் தம்முடன் பேசுபவர்களிடம் மட்டுமே நட்பை வைத்துக்கொண்டு பேசுவதாக அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

தோனி பேசவில்லையா:

அதற்கான காரணம் என்னவென்று தமக்குத் தெரியவில்லை என்று ஹர்பஜன் தெரிவித்தார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போதும் தோனி தம்மிடம் குறைவாகவே அதுவும் களத்தில் மட்டுமே பேசுவார் என்றும் ஹர்பஜன் கூறினார். தோனிக்கு எதிராக எந்த பகையும் இல்லை என்றும் தெரிவித்த ஹர்பஜன் தம் மீது ஏதேனும் இருந்தால் அதை நேராக அவர் சொல்லலாம் என்றும் கூறியிருந்தார்.

அப்படி நாட்டுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் ஒன்றாக விளையாடியும் 10 வருடங்களாக தோனி பேசவில்லை என்று ஹர்பஜன் தெரிவித்த கருத்து அந்த சமயத்தில் ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஒரு தனியார் நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அதே நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:

அப்போது தோனியின் பின்னே ஹர்பஜன் நடந்து வருகிறார். சில அடிகள் வந்ததும் இருக்கையில் அமருங்கள் என்று தோனி மரியாதையுடன் ஹர்பஜனிடம் தெரிவிக்கிறார். அதை ஏற்ற ஹர்பஜன் இருக்கையில் அமரச் செல்கிறார். அவரது அருகே தோனியும் உட்காரச் செல்கிறார். வெறும் 10 நொடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல்: 403 ரன்ஸ்.. ரிச்சா, பெரி அதிரடியில் குஜராத்தை தெறிக்க விட்ட ஆர்சிபி.. சாதனை வெற்றி

அதைப் பார்க்கும் ரசிகர்கள் அப்படியானால் தோனி 10 வருடமாக பேசவில்லை என்று கடந்த மாதம் சொன்னது பொய்யா? என்று ஹர்பஜனை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மேலும் விமர்சித்தாலும் பாராட்டினாலும் தல தோனி எப்போதும் தல என்பதற்கு அடையாளமாக அமைதியாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் ஹர்பஜன், கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்கள் தான் அவ்வப்போது தோனி மீது வன்மத்தை காட்டி வருவதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -