- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னுமா உன் கால் உடையல? ரிஷப் பண்ட்டை அனுப்ப குறுக்கு வேலை செய்த இங்கிலாந்து.. ரசிகர்கள் சாடல்

இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் நிலையில் 4வது போட்டி மான்செஸ்டரில் ஜூலை 23ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷபன்ட் 54, ஜெய்ஸ்வால் 58, சாய் சுதர்சன் 61 ரன்கள் எடுத்தார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடும் இங்கிலாந்தும் 2வது நாள் முடிவில் 225/2 ரன்களை அடித்து இந்தியாவை மிரட்டி வருகிறது. பென் டக்கெட் 94, ஜாக் கிராவ்லி 84 ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் ஜோ ரூட் 11*, ஓலி போப் 20* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

குறுக்கு வழி:

முன்னதாக இப்போட்டியில் ரிஷப் பண்ட் பாதத்தில் காயத்தை சந்தித்து நடக்க முடியாமல் வலியுடன் வண்டியில் ஏறி சென்றார். அதனால் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் நாட்டுக்காக காயத்தைப் பொருட்படுத்தாமல் முதலுதவி மட்டும் எடுத்துக்கொண்டு பேட்டிங் செய்ய வந்தார். அப்போது இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி வரவேற்பு கொடுத்தார்கள்.

அந்த வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கிய பண்ட் வலியின் காரணமாக சிங்கிள் ஓட முடியாமல் பவுண்டரிகளால் மட்டுமே ரன்களை எடுத்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். அதனால் ஒரு கட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அவருடைய காலை குறி வைத்து பவுலிங் செய்தார்கள். குறிப்பாக ஏற்கனவே உடைந்துள்ள ரிஷப் பண்ட் வலது பாதத்தை நோக்கி பென் ஸ்டோக்ஸ் யார்கர் பந்துகளைப் போட்டார்.

- Advertisement -

ரசிகர்கள் சாடல்:

இருப்பினும் இம்முறை சுதாரித்த பண்ட் அதை தம்முடைய காலில் படவிடாமல் பேட்டை வைத்து தடுத்தார். மற்றொரு தருணத்தில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்து விட்டு மெதுவாக ஓடி வந்தார். அப்போது “இன்னுமா உன் கால் உடையவில்லை” என்ற வகையில் ரிஷப் பண்ட் பாதத்தை பென் ஸ்டோக்ஸ் உற்றுப் பார்த்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 1000 ரன்ஸ் 90 சிக்ஸ்.. சேவாக் வாழ்நாள் சாதனை சமன் செய்த ரிஷப் பண்ட்.. இங்கிலாந்தில் புதிய உலக சாதனை

அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டை நேர்மைத் தன்மையுடன் விளையாடுவதாக பெருமை பாடும் இங்கிலாந்தினர் இப்படி குறுக்கு வழியில் ரிசப் பண்டை அவுட்டாக்க நினைக்கலாமா? என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். இதை அடுத்து ரிஷப் பண்ட் 2வது இன்னிங்சிலும் நாட்டுக்காக பேட்டிங் செய்வார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் கடைசிப் போட்டியில் அவர் விளையாடுவது 99% சந்தேகம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -