- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னதான் இருந்தாலும் கம்பீர் முன்னாடி பாண்டியா அப்படி பேசியிருக்க கூடாது – கலகலக்கும் ரசிகர்கள், நடந்தது இதோ

துபாயில் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பரபரப்பாக நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை போராடி கடைசி ஓவரில் வீழ்த்திய இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் தரமான வேகப்பந்து வீச்சில் தடுமாறி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிக பட்சமாக தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதன்பின் 148 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும் 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த ரோகித் சர்மா 12 ரன்களிலும் விராட் கோலி 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த சமயத்தில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 18 ரன்களில் நடையை கட்டியாதால் 89/4 என தவித்த இந்தியாவுக்கு 52 பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா 35 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 33* (17) ரன்களை விளாசிய பாண்டியா சிறப்பான பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

மாஸ் பினிஷர்:
அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற இந்தியா கடந்த வருடம் இதே துபாயில் உலக கோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை கொடுத்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 33* ரன்களும் எடுத்து ஆல்-ரவுண்டராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக 2 அணிகளும் சரிசமமாக மோதிக் கொண்ட நிலையில் கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்த அவர் தான் வெற்றியை தீர்மானித்ததில் முக்கிய பங்காற்றினார்.

அதிலும் 89/4 என சரிந்த போது ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து ஆரம்பத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 19வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து சரியான நேரத்தில் கச்சிதமாக செயல்பட்டு பினிஷிங் செய்தது அனைவரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் கடைசி ஓவரில் தன்னால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் கண்ணில் அனல் பறக்க பேட்டிங் செய்து தன்னை மிகச்சிறந்த பினிஷர் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்த அவருக்கு எதிர்ப்புறம் இருந்த தினேஷ் கார்த்திக் தலை வணங்கியது ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டது.

- Advertisement -

கம்பீர் முன்னாடி:
அப்படி மிரட்டலாக பினிசிங் கொடுத்த பாண்டியாவிடம் போட்டி முடிந்ததும் இவ்வளவு பெரிய அழுத்தத்தை சமாளித்து எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது அருகில் முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் மற்றும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் உடனிருந்தனர். அந்த நிலைமையில் “மஹி பாயியுடன் (எம்எஸ் தோனி) இணைந்து விளையாடிய போது பினிஷிங் செய்வதைப் பற்றி அவரிடமிருந்து நிறைய கற்றுள்ளேன். மேலும் நான் இணைந்து விளையாடிய அனைத்து வீரர்களிடமும் கற்ற நல்ல அம்சங்கள் எனக்கு உதவியது” என்று கூறினார்.

அதை பார்த்த ரசிகர்கள் என்னதான் இருந்தாலும் கம்பீரை அருகில் வைத்துக்கொண்டு தோனியை ஹர்திக் பாண்டியா புகழ்ந்து பேசியிருக்கக் கூடாது என்ற வகையில் சமூக வலைதளங்களில் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் இந்தியாவுக்காக பல வருடங்கள் இணைந்து விளையாடி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கெளதம் கம்பீர் 2011 உலகக் கோப்பை பைனலில் 97 ரன்கள் குவித்த போதிலும் கடைசி நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு 91* ரன்கள் விளாசி சிக்சருடன் பினிஷிங் கொடுத்த தோனி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதனால் தம்முடைய உழைப்புக்கான பெயர் முழுவதும் தோனி வாங்கி விட்டதாக நினைக்கும் கௌதம் கம்பீர் அதை வெளியில் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் பல தருணங்களில் விமர்சிக்கும் போதும் சமூக வலைதள பதிவுகளின் வாயிலாகவும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தன்னுடைய கேரியரின் கடைசி நேரங்களில் கேப்டனாக ஆதரவு கொடுக்காததால் தோனி மீது கம்பீர் எப்போதுமே மறைமுகமான அதிருப்தியை வைத்துள்ளார்.

இதையும் படிங்க : தேசிய கொடியை அவமானப்படுத்தினாரா ஜெய் ஷா – வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் இந்திய ரசிகர்கள்

அதனால் தோனி என்றாலே கம்பீருக்கு பிடிக்காது என்று நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பேசுவதை இப்போதும் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட நிலைமையில் அவரை வைத்துக் கொண்டே தோனியை ஹர்திக் பாண்டியா பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -
Published by