எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பண்ணலாமா? இளம்வீரரை ஆதரித்து ஷ்ரேயாஸ் ஐயரை – திட்டும் ரசிகர்கள்

Iyer
- Advertisement -

கடந்த வாரம் கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பாக மும்பை நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 1-ஆம் தேதியன்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் பஞ்சாப்பை பதம் பார்த்த கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 137 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக இலங்கையைச் சேர்ந்த ராஜபக்சே வெறும் 9 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 31 ரன்களை விளாசினார்.

- Advertisement -

பஞ்சாப் சொதப்பல், மாஸ் காட்டிய ரசல்:
இருப்பினும் அடுத்து வந்து வீரர்கள் கொல்கத்தாவின் அதிரடியான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெரிய ரன்கள் அடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும் டிம் சௌதீ 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 138 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் அஜிங்கிய ரஹானே 12 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 26 (15) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த நிதிஷ் ராணா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்ததால் 51/4 என தடுமாறிய கொல்கத்தாவுக்கு அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் முதல் பந்தில் இருந்தே சரவெடியாக சிக்சர்களை விளாசினார். வெறும் 31 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி மற்றும் 8 இமாலய சிக்ஸர் உட்பட 70* ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து கொல்கத்தாவை தனி ஒருவனாக வெற்றி பெற செய்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற 24* (23) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

கழற்றிவிடப்பட்ட செல்டன் ஜேக்சன்:
இந்த வெற்றியால் இந்த தொடரில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள கொல்கத்தா 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அந்த அணியை இந்த வருடம் முதல் முறையாக புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் மிகச்சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து தனது அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இருப்பினும் நேற்றைய போட்டியின் போது கொல்கத்தா அணிக்காக முதல் 2 போட்டிகளில் விளையாடிய இளம் இந்திய விக்கெட் கீப்பர் செல்டன் ஜாக்சன் அதிரடியாக நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக மற்றொரு இளம் இந்திய வீரர் ஷிவம் மாவி அணியில் சேர்க்கப்படுவதாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடந்த போட்டியில் இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றாலும் ஒரு போட்டியில் மோசமாக செயல்பட்டதன் காரணமாக ஒரு நல்ல வீரரை கொல்கத்தாவும் ஸ்ரேயாஸ் ஐயரும் கழற்றி விட்டது பெரும்பாலான ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

- Advertisement -

சச்சின், யுவி பாராட்டிய ஷெல்டன் ஜேக்சன்:
ஏனெனில் இந்த வருடத்தின் நடப்புச் சாம்பியன் சென்னைக்கு எதிராக கொல்கத்தா களமிறங்கிய முதல் போட்டியில் செல்டன் ஜாக்சன் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அந்தப் போட்டியில் சென்னை வீரர் ராபின் உத்தப்பாவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த அவர் பலரின் பாராட்டுகளையும் பெற்றார். குறிப்பாக நீங்கள் ஸ்டம்பிங் செய்ததை பார்த்த போது எம்எஸ் தோனியை பார்ப்பதைப் போன்ற உணர்ச்சியை கொடுத்தது என இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளிப்படையாகவே பாராட்டி இருந்தார்.

மேலும் அந்த சமயத்தில் ஹெல்மெட் போடாமல் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து பெய்ல்ஸ்சை தூக்கிய அவரின் திறமையை பார்த்த மற்றொரு ஜாம்பவான் யுவராஜ் சிங் “தயவு செய்து விக்கெட் கீப்பிங் செய்யும்போது ஹெல்மெட் போடுங்க, உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது” என அக்கறையுடன் பாராட்டினார். அப்படி பாராட்டு மழையில் நனைந்து வந்த அவர் பெங்களூருக்கு எதிராக நடந்த 2வது போட்டியில் துரதிஷ்டவசமாக சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் டீம்ல இவரு மட்டும் நின்னு ஆடனா இன்னைக்கு மும்பை காலிதான் – எச்சரித்த ரவி சாஸ்திரி

அதன் காரணமாக அதற்கு அடுத்த போட்டியிலேயே அவரை கொல்கத்தா அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது. இத்தனைக்கும் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டாலும் நிரந்தரமான இடம் கிடைக்காமல் தவித்த நிலைமையும் வலியையும் பற்றி தெரிந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் இப்படி பண்ணலாமா என ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement