ராஜஸ்தான் டீம்ல இவரு மட்டும் நின்னு ஆடனா இன்னைக்கு மும்பை காலிதான் – எச்சரித்த ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

மும்பையில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் வாரத்திலேயே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் ஒவ்வொரு போட்டியின் முடிவு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏனெனில் பலமான அணிகளுக்கு இணையாக மற்ற அணிகளும் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி விளையாடுவதால் போட்டியின் முடிவு இறுதி நேரத்திலேயே கிடைக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு படு திரில்லாக அமைந்து வருகிறது.

MI-vs-RR

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் முக்கியமான லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணி மும்பை அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இன்று சனிக்கிழமை இரண்டு போட்டிகள் உள்ளதால் முதல் போட்டி டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த சீசனில் தங்களது முதல் போட்டியில் விளையாடிய மும்பை அணியானது டெல்லி அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

அதிலிருந்து மீண்டு வரும் வகையில் இன்றைய ஆட்டத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே வேளையில் ராஜஸ்தான் அணி தற்போது பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் கூடுதல் பலத்துடன் மிகச் சிறப்பாக திகழ்ந்து வருகிறது. முதல் போட்டியில் ஹைதராபாத் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அவர்கள் தற்போது மும்பை அணியை வீழ்த்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

buttler

அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்டிங்கில் ஏகப்பட்ட அதிரடி வீரர்கள் இருப்பதும் பந்துவீச்சாளர்களில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருப்பதும் என அசத்தலான அணியாக தற்போது மாறியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக மும்பை அணியை எச்சரித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ராஜஸ்தான் அணி தற்போது மிகவும் வலுவான அணியாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக ஜாஸ் பட்லரை நீங்கள் 6 ஓவருக்கு மேல் தாக்கு பிடிக்க விட்டுவிட்டால் அவரை எந்த ஒரு பவுலராலும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே அவரை பவர்பிளே ஓவர்களிலேயே வீழ்த்த வேண்டும். அப்படி அவரை வீழ்த்த வேண்டும் என்றால் பும்ராவை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : தனது ஆல் டைம் ஐபிஎல் சாதனையை தகர்த்த ப்ராவோ பற்றி மலிங்கா கூறியது என்ன தெரியுமா? – விவரம் இதோ

ஒருவேளை அவரை வீழ்த்த முடியாமல் போகும் பட்சத்தில் பட்லர் அதிரடி காட்ட ஆரம்பித்துவிட்டால் மும்பை அணியை அடித்து நொறுக்கி விடுவார் என்றும் ஜாஸ் பட்லர் 360 டிகிரியிலும் ரன்மழை பொழியக்கூடியவர் என்பதனால் மும்பை அணி அவரை நிறுத்தாவிட்டால் இன்றைய போட்டியில் பெரும் ஆபத்தை சந்திக்கும் என்று ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement