இந்திய அணி தோல்வி அடைந்தாலும் பாராட்டி தள்ளும் ரசிகர்கள் – எதற்கு தெரியுமா ?

Gowtham
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் தவான் 40 ரன்களை குவித்தார். அவரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறிய நிலையில் இந்திய அணி ரன் குவிக்க தவறியது.

INDvsSl-1

- Advertisement -

அடுத்ததாக 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் இந்த வெற்றி அவர்களுக்கு எளிதாக கிடைக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி தடுமாறியது.

பின்னர் மிடில் ஆர்டரில் தனஞ்செயா டி சில்வா 40 ரன்கள் அடித்ததன் மூலம் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், சக்காரியா, சக்கரவர்த்தி, ராகுல் சாகர், குல்தீப் யாதவ் ஆகிய அனைவரும் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

chahar

இந்த பந்துவீச்சு திறனையும், போராட்ட குணத்தையும் தான் தற்போது இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதன்படி எளிதாக வெற்றி பெறவேண்டிய இந்த போட்டியில் இந்திய அணி கொடுத்த இந்த கடுமையான போராட்டம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் இந்திய பவுலர்கள் மட்டுமின்றி கேப்டன் தவானின் இந்த செயல்பாடு குறித்தும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவ்வளவு குறைவான ரன்களை வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு ஒரு கடுமையான போட்டி கொடுத்த இந்திய அணியை ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement