பிரபல நடிகையுடன் கொஞ்சி குலாவும் இளம் இந்திய வீரர்! கிரிக்கெட்டில் கவனம் செலுத்த சொல்லி கலாய்க்கும் ரசிகர்கள்

KKR
- Advertisement -

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான முதல் வார்த்தை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை நகரில் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு த்ரில்லான தருணங்களை விருந்தாக படைத்து வருகிறது. வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் நடைபெறும் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்க பைனல் உட்பட மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த வருடத்தின் கோப்பையை வெல்வதற்காக இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

வெற்றி பெறுமா கொல்கத்தா:
இந்த தொடரில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள இளம் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக கோப்பையை வெல்வதற்காக முழு மூச்சுடன் விளையாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன் கடந்த 2012, 2014 ஆகிய வருடங்களில் கௌதம் கம்பீர் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி அதன்பின் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. அதிலும் கடந்த வருடம் அபாரமாக செயல்பட்ட அந்த அணி பைனல் வரை சென்று சென்னையிடம் தோல்வியடைந்தது.

- Advertisement -

கடந்த வருடம் முதலில் இந்தியாவில் நடந்த ஐபிஎல் 2021 தொடரின் முதல் பாகத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் தடுமாறிய அந்த அணி பிளே ஆப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாது என அனைவரும் நினைத்தனர். ஆனால் அதன்பின் துபாயில் நடந்த 2-வது பாகத்தில் அதிரடியாக செயல்பட்ட அந்த அணி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இறுதிப் போட்டிக்கும் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் துபாயில் நடந்த 2-வது பாகத்தில் அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் என்றே கூறலாம்.

நடிகையுடன் டேட்டிங்:
ஏனெனில் கடந்த வருடம் 10 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்கி எதிரணிகளை வெளுத்து வாங்கி 4 அரை சதங்கள் உட்பட 370 ரன்களை விளாசினார். அதைப்போல் பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒரு ஆல்ரவுண்டராக அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர் கடந்த வருடம் இறுதியில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் தொடரில் அற்புதமாக செயல்பட்டு நிறைய ரன்களை குவித்த காரணத்தால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

அந்த வாய்ப்பில் அசத்த தொடங்கிய அவர் கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் மிடில் வரிசையில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து தன்னுடைய பினிஷிங் செய்யும் திறமையையும் வெளிப்படுத்தினார். அதனால் இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக் போன்ற நட்சத்திர வீரர்களை கூட தக்க வைக்காத கொல்கத்தா நிர்வாகம் இவரை 8 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு இந்த வருட ஐபிஎல் தொடரில் தக்க வைத்தது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் விளையாடி வரும் அவர் பிரியங்கா ஜவால்கர் எனும் பிரபல தெலுங்கு நடிகையுடன் கொஞ்சி குலாவி வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கவனம் செலுத்துங்க:
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் பிரியங்கா ஜவால்கர் கலா வரம் ஆயே, டேக்ஸிவாலா, திம்மருசு போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். தற்போது 29 வயது நிரம்பியுள்ள அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அழகான புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த வெங்கடேஷ் ஐயர் “கியூட்” என ரொமான்ஸாக கமெண்ட் செய்ய அதற்கு அந்த நடிகை “யார்? நீங்களா” என பதிலளித்துள்ளார். இதை பார்த்த நிறைய ரசிகர்கள் இந்த இருவருக்கும் காதலா என்பது போல் வழக்கமான கிசுகிசுக்களை பேசி வருகிறார்கள்.

- Advertisement -

அதேசமயம் இதுபோன்ற நடிகைகளிடம் பேசுவதை விட்டுவிட்டு ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்துங்க என்றும் வெங்கடேஷ் ஐயருக்கு நிறைய ரசிகர்கள் அறிவுரை வழங்குகின்றனர். ஏனெனில் கடந்த வருடம் சக்கை போடு போட்டு இந்திய அணியில் விளையாடும் அளவுக்கு உயர்ந்த அவர் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் வெறும் 29 ரன்களை 9.67 என்ற படுமோசமான சராசரியில் எடுத்து தடுமாறி வருகிறார்.

இதையும் படிங்க : மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் தினேஷ் கார்த்திக் வித்தியாசமான ஹெல்மட் அணிந்திருக்க – என்ன காரணம் தெரியுமா?

எனவே கொல்கத்தா கோப்பையை வெல்ல வேண்டுமெனில் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என நிறைய ரசிகர்கள் கூறுகின்றனர். அத்துடன் களத்தில் நீங்கள் சிறப்பாக விளையாடினால் அது போன்ற நடிகைகள் உங்களை பார்க்க வரிசையில் வந்து நிற்பார்கள் என்றும் நியாயமான கருத்துகளை ரசிகர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலைமையில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து கொல்கத்தா புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement