தரவரிசை எல்லாம் சும்மா, ரிஸ்வானை விட சூர்யாகுமார் தான் சிறந்த டி20 பேட்ஸ்மேன் – ஆதாரத்தை நீட்டும் ரசிகர்கள்

Mohammed Rizwan Suryakumar Yadav
- Advertisement -

அக்டோபர் 16இல் துவங்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. இப்போட்டியில் பாகிஸ்தானின் வெற்றிக்கு பேட்டிங் துறையில் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதால் டாப் ஆர்டரில் விளையாடும் கேப்டன் பாபர் அசாம் – முகமத் ரிஸ்வான் ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. குறிப்பாக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக திகழும் முஹம்மது ரிஸ்வான் கடந்த உலகக் கோப்பையை போலவே இம்முறையும் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவது அவசியமாகிறது.

மறுபுறம் ஜஸ்பிரித் பும்ரா விலகியதால் சுமாரான பந்து வீச்சை கொண்டுள்ள இந்தியா வெல்வதற்கு பேட்டிங் துறை எக்ஸ்ட்ராவாக உழைக்க வேண்டியுள்ளது. அதிலும் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா – கேஎல் ராகுல் ஆகியோர் தடுமாற்றமான பார்மில் இருப்பதால் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக திகழும் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஃபார்முக்கு திரும்பி விராட் கோலி ஆகியோரையே இந்திய பேட்டிங் துறை நம்பியுள்ளது. அதிலும் குறிப்பாக தற்சமயத்தில் விராட், ரோகித், ராகுல் ஆகியோரை விட அட்டகாசமான பார்மில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக திகழும் சூரியகுமாரின் ஆட்டம் இத்தொடரில் இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் கணிக்கின்றனர்.

- Advertisement -

உண்மை என்ன:
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாகவே ரிஸ்வான் – சூரியகுமார் ஆகியோரிடையே ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி நிலவுகிறது. அதில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேனாக (1326, 2021இல்) உலக சாதனை படைத்து 2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் வென்ற முஹம்மது ரிஸ்வான் சமீபத்திய ஆசிய கோப்பையில் நம்பர் ஒன் இடத்தை எட்டினார்.

இந்நிலைமையில் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் 34 ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றிய அவர் இந்த வருடம் 18 இன்னிங்சில் 821* ரன்களைக் குவித்து அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சூரியகுமாரின் சாதனையை (801* ரன்கள்) தகர்த்து புதிய சாதனை படைத்தார். அதனால் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளதாக பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

- Advertisement -

1. ஆனால் அந்த எக்ஸ்ட்ரா 20 ரன்களை எடுப்பதற்கு அவர் எக்ஸ்ட்ராவாக 216 பந்துகளை அதாவது 36 ஓவர்களை எதிர்கொண்டுள்ளார் என்று இந்திய ரசிகர்கள் ஆதரத்தை நீட்டுகிறார்கள்.

2. மேலும் 821 ரன்களை 54.73 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ள அவர் அந்த ரன்களை 650 பந்துகளில் 126.30 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளார். இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில் தொடக்க வீரராக களமிறங்கும் அவர் பெரும்பாலும் உள்வட்டத்திற்கு வெளியே 2 பீல்டர்களை கொண்ட பவர்பிளே ஓவர்களில் விளையாடியும் இவ்வளவு குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

- Advertisement -

3. ஆனால் டி20 கிரிக்கெட்டில் வெற்றிக்கு சராசரியை விட ஸ்ட்ரைக் ரேட் தான் முக்கியமாகும். இதிலிருந்து பெரிய ரன்களை எடுக்கும் அவர் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி தனது இடத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் செயல்படுவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

4. மறுபுறம் 23 இன்னிங்ஸ்சில் 801* ரன்களை 40.50 என்ற நல்ல சராசரியில் எடுத்தாலும் அதை வெறும் 434 பந்துகளில் 184.56 என்ற மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் அதிகபட்ச எரிமலை ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ள சூர்யகுமார் தான் சிறந்த டி20 பேட்ஸ்மேன் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

5. மேலும் அவர் உள்வட்டத்துக்கு வெளியே 4 பீல்டர்கள் நிற்கும் அழுத்தமான மிடில் ஓவரில் மிடில் ஆர்டரில் களமிறங்கி டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார் என்பதை நினைக்கும் போதே கைதட்டி பாராட்ட வைக்கிறது.

6. இங்கே ரிஸ்வான் 2021 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடித்தது போன்ற இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளதாக கூறும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தவிர்த்து சூரியகுமார் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு அதே ரிஸ்வான் மெதுவாக விளையாடி ஆசிய கோப்பை பைனலில் தோல்வியை பரிசளித்ததாக பதிலடி கொடுக்கும் இந்திய ரசிகர்கள் ஹாங்காங் போட்டியை தவிர்த்து சமீபத்திய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளையும் அதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் சூர்யகுமார் சதமடித்ததையும் நீங்கள் பார்க்கவில்லையா என்று கூறுகின்றனர்.

Advertisement