ஆஹா பேபி மலிங்கா கிடைச்சாச்சு ! முதல் போட்டியிலேயே அசத்திய சிஎஸ்கே இளம் பவுலர், வித்யாசமான சாதனை

CSK Matheesa Pathirana
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 15-ஆம் தேதி 62-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சந்தித்தன. இதில் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோனதால் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைமையில் ஜெகதீசன், பிரசாந்த் சோலங்கி, மதீஸா பதிரனா ஆகிய 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த சென்னை கேப்டன் எம்எஸ் தோனி டாஸ் வென்று தைரியமாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆனால் அதற்கேற்றார்போல் பேட்டிங் செய்யாத அந்த அணி 20 ஓவர்களில் குஜராத்தின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 133/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Rashid Khan Ruturaj

- Advertisement -

அந்த அணிக்கு தொடக்க வீரர் டேவோன் கான்வே 5 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அடுத்து வந்த மொயீன் அலி 21 (17) ரன்களில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் மெதுவாக பேட்டிங் செய்து 53 (49) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் கைகோர்த்த ஜெகதீசனும் 39* (33) ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷிவம் துபே 0 (2) தோனி 7 (10) போன்ற முக்கிய வீரர்களும் இறுதி நேரத்தில் அதிரடி காட்டாமல் சொதப்பிய நிலையில் குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சமி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

சென்னை தோல்வி:
அதை தொடர்ந்து 134 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஹா – சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். அதில் கில் 18 (17) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மேத்யூ வேட் 20 (15) ஹர்திக் பாண்டியா 7 (6) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் இறுதிவரை அவுட்டாகாமல் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 67* (57) ரன்கள் விளாசிய ரித்திமான் சஹா பினிஷிங் செய்ததால் 19.1 ஓவர்களில் 137/3 ரன்களை எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

Wriddhiman Saha 67

இந்த வெற்றியால் பங்கேற்ற 13 போட்டிகளில் 10-வது வெற்றியை பதிவு செய்த குஜராத் 20 புள்ளிகளைப் பெற்று ஏற்கன்வே ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் கோட்டைவிட்ட சென்னை பந்துவீச்சில் போராடிய போதிலும் பங்கேற்ற 13 போட்டிகளில் 9-வது தோல்வியை பதிவு செய்து தொடர்ந்து புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது.

- Advertisement -

பேபி மலிங்கா:
இருப்பினும் கூட எப்போதுமே வயதான வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் சென்னை நேற்றைய போட்டியில் 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அதிலும் குறிப்பாக காயமடைந்த நியூசிலாந்து பவுலர் ஆடம் மில்னேவுக்கு பதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் இலங்கை பந்துவீச்சாளர் மதீஸா பதிரனா தனது வித்தியாசமான பந்துவீச்சால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இலங்கையின் யார்கர் கிங் மற்றும் ஜாம்பவான் லசித் மலிங்காவை போலவே சிலிங்கா வகையான பந்துவீச்சு ஆக்சனை பயன்படுத்தி மிரட்டலாக பந்துவீசிய அவர் நேற்றைய அறிமுக போட்டியிலேயே 3.1 ஓவரில் 24 ரன்களை 7.58 என்ற எக்கனாமியில் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரின் பந்து வீச்சை பார்த்த பல ரசிகர்கள் கிரிக்கெட்டுக்கு அடுத்த பேபி மலிங்கா கிடைத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பாராட்டினார்கள்.

- Advertisement -

வித்யாச சாதனை:
அதிலும் ஐபிஎல் தொடரில் சென்னையின் பரம எதிரியான மும்பைக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மலிங்காவை போல வரும் காலங்களில் இந்த 19 வயது பேபி மலிங்கா தங்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்ற மிகப்பெரிய நம்பிக்கை சென்னை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மலிங்காவே தனது டுவிட்டரில் தனது நாட்டு இளம் வீரரை பாராட்டியுள்ளார்.

மேலும் பேபி மலிங்காவை பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் எம்எஸ் தோனி பேசியது பின்வருமாறு. “மதீஸா பதிரனா சற்று மலிங்காவை போன்ற சுவாரசியமான திறமையாகும். மெதுவாக பந்து வீசும் திறமை பெற்றுள்ள அவர் தொடர்ச்சியாக ஒரே வேகத்தில் வீசினால் எதிரணிகள் அடிப்பதற்கு சிரமப்படுவார்கள்” என்று பாராட்டினார்.

இப்படி வித்தியாசமான பந்துவீச்சை கொண்டுள்ள அவர் நேற்றைய முதல் போட்டியின் முதல் பந்திலேயே இந்திய வீரர் சுப்மன் கில்லை 18 (17) ரன்கள் எடுத்திருந்தபோது எல்பிடபிள்யூ செய்து மிரட்டினார். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் களமிறங்கிய முதல் அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 9-வது பவுலர் என்ற வித்தியாச சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. இஷாந்த் சர்மா – ராகுல் டிராவிட், 2008
2. வில்கின் மோட்டா – சுரேஷ் ரெய்னா, 2008
3. ஷேன் ஹார்வுட் – அசார் பிளாகியா, 2009
4. அமித் சிங் – சன்னி சோஹல், 2009
5. சார்ல் லங்வேள்ட்ட் – ராப் குய்னே, 2009
6. அலி முர்தசா – நமன் ஓஜா, 2010
7. டிபி சுதீந்திரா – பப் டு பிளேஸிஸ், 2012
8. அல்சாரி ஜோசப் – டேவிட் வார்னர், 2019
9. மதீஸா பதிரனா – சுப்மன் கில், 2022*

Advertisement