IND vs AUS : போராடியும் தோற்ற பாண்டியாவை கலாய்த்த பாக் நடிகைக்கு இந்திய ரசிகர்கள் நெத்தியடி பதில், நடந்தது இதோ

Hardik Padnday IND vs PAk
- Advertisement -

டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த இந்தியா தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டு விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நல்ல வாய்ப்பாக கருதப்படும் இந்த தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 208/6 ரன்கள் சேர்த்தது.

அதிக பட்சமாக ஹர்திக் பாண்டியா 71* (30) ரன்களும் ராகுல் 55 (35) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 46 (25) ரன்களும் எடுத்தனர். அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஆரோன் பின்ச் 22, ஸ்டீவ் ஸ்மித் 35, கிளென் மேக்ஸ்வெல் 1 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் இளம் தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் அதிரடியாக 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 61 (30) ரன்கள் குவித்தார். இறுதியில் மேத்யூ வேட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (21) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்தார். அதனால் தன்னை உலகச் சாம்பியன் என்று நிரூபித்து அந்த அணி ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று இந்தியாவை தலை குனிய வைத்தது.

- Advertisement -

அசத்திய பாண்டியா:
மறுபுறம் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட இந்தியா பந்துவீச்சில் அந்த அத்தனை உழைப்பையும் வீணாக்கும் வகையில் ரன்களை வாரி வழங்கி நம்பர் ஒன் டி20 அணி என்பதற்கேற்றார் போல் செயல்படாமல் தோற்றது. இதனால் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரை வென்று தலை நிமிர கடைசி 2 போட்டிகளில் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் 16 ஓவரில் 145/5 என தடுமாறிய இந்தியா 200 ரன்களை தாண்டுமா என்ற கேள்வி எழுந்த போது அற்புதமாக பேட்டிங் செய்த பாண்டியா 7 பவுண்டரி 5 சிக்சருடன் 71* (30) ரன்களை 236.67 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட்டு வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும் பந்து வீச்சாளர்களின் சொதப்பலால் வெற்றி பறிபோன நிலையில் மனம் தளராத பாண்டியா அடுத்தடுத்த போட்டிகளில் வென்று இந்தியாவை தலை நிமிர வைப்போம் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். “நாங்கள் கற்றுக் கொள்வோம், நாங்கள் முன்னேறுவோம். எங்களுக்கு ஆதரவு கொடுத்த அத்தனை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. எப்போதும் இந்தியா” என்று தோல்விக்கு பின் ட்விட்டரில் பதிவிட்ட வரிகள் ரசிகர்களுக்கு தெம்பை கொடுத்தன.

- Advertisement -

பாக் நடிகை:
அதை பார்த்த பிரபல பாகிஸ்தான் நடிகை “சேஹர் ஷின்வாரி” தேவையில்லாமல் “தயவு செய்து அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் அடுத்த போட்டியில் தோல்வியடைந்து இதே போல் மேலும் கற்றுக்கொள்ளுங்கள்” என்று நக்கலாக கிண்டலடிக்கும் வகையில் பதிலளித்தார். அதாவது சமீபத்திய ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் ஹர்திக் பாண்டியாவின் உதவியுடன் தோல்வியை கொடுத்த இந்தியாவுக்கு சூப்பர் 4 சுற்றில் பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பைனலுக்கு செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

அதற்கு பதிலடியும் பழி தீர்க்கவும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் மெல்பேர்ன் மைதானத்தில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ள காத்திருக்கிறது. எனவே அப்போட்டியில் இதேபோல் தோற்று பாடங்களை கற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தான் நடிகை கிண்டலடித்துள்ளார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் முதலில் உங்களது நாட்டை பாருங்கள் என்று நெத்தியடி பதிலைக் கொடுத்து வருகிறார்கள்.

ஏனெனில் ஆசிய கோப்பையில் இலங்கையிடம் தோற்று நாடு திரும்பிய பாகிஸ்தானுக்கு 17 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 7 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் பங்கேற்கிறது. அதனுடைய முதல் போட்டி இந்தியா மொஹாலியில் தோல்வியடைந்த அதே நாளன்று கராச்சியில் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் எடுத்த 158/7 ரன்களை 19.2 ஓவரில் 160/4 ரன்களை எடுத்த இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அந்த வகையில் இந்தியாவை விட மோசமாக தோல்வியடைந்த உங்களது நாட்டின் ஆட்டத்தை பார்க்க முடியாமல் எங்களது நாட்டை பார்க்கும் அளவுக்கு உங்களது நாடு மோசமாக விளையாடியதை நினைத்து பாருங்கள் என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். மேலும் அதே அக்டோபர் 23இல் எங்களிடம் தோல்வியடைந்து பாடத்தைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயாராகுங்கள் என்றும் இந்திய ரசிகர்கள் அந்த நடிகைக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement