ஏதோ திறமை இருக்கும் போல! கலாய்த்த ரசிகர்களையே பாராட்ட வைத்த இளம் வீரர், புதிய வரலாற்று சாதனை

Riyan Parag 56.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனேவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர் தேவதூத் படிக்கல் 7 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 4 பவுண்டரி உட்பட 17 (9) ரன்களில் அவுட்டாகி தனது வேலையை செய்து சென்றார். அந்த நிலையில் ஏற்கனவே 3 சதங்களை அடித்து ஆரஞ்சு தொப்பியுடன் நல்ல பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் இம்முறை 8 (9) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அதனால் 33/3 என தடுமாறிய ராஜஸ்தானை அதிரடியாக விளையாடி காப்பாற்ற முயன்ற கேப்டன் சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 27 (21) ரன்களில் அவுட்டானதால் சரிந்த அந்த அணியை டார்ல் மிட்சேல் பொறுமையாக விளையாடி மீட்டெடுக்க முயற்சித்த போதிலும் 16 (24) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அசத்திய ரியன் பராக்:
அந்த நிலைமையில் ராஜஸ்தானின் பினிஷெராக கருதப்படும் சிம்ரோன் ஹெட்மையர் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 3 (7) ரன்களில் அவுட்டானதால் அந்த அணியின் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்தனர். ஆனால் நடுவரிசையில் மறுபுறம் விளையாடிக் கொண்டிருந்த இளம் வீரர் ரியன் பராக் நீண்ட நாட்கள் கழித்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். கடைசி நேரத்தில் நங்கூரமாக நின்ற அவர் மிகச்சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு பவுலர்களை கடைசி நேரத்தில் சரமாரியாக அடித்து 3 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட 56* (31) ரன்கள் விளாசி போராட்ட பினிஷிங் கொடுத்ததால் தப்பிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 144/8 ரன்கள் சேர்த்தது.

பெங்களூரு சார்பில் ஹேசல்வுட், சிராஜ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 145 என்ற சுலபமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு இம்முறை விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கிய போதிலும் 9 (10) ரன்களில் அவுட்டாக கேப்டன் டு பிளசிஸ் 23 (21) ரன்களில் நடையைக் கட்டினார். அந்த நிலையில் களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க ரஜத் படிடார் 16 (16) ஷபாஸ் அஹமட் 17 (27) பிரபுதேசாய் 2 (7) போன்ற இளம் வீரர்கள் ராஜஸ்தானின் சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

டாப்பர் ராஜஸ்தான்:
இந்த மோசமான நிலைமையில் கடந்த போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து பினிஷெராக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கும் துரதிர்ஷ்டவசமாக 6 (4) ரன்களில் ரன் அவுட்டானதால் பெங்களூரு அணி தோல்வி உறுதியானது. அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு பரிதாபமாக தோற்றது.

ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய குல்தீப் சென் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற ராஜஸ்தான் பங்கேற்ற 8 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

- Advertisement -

ரியன் பராக் சாதனை:
அதைவிட இந்த வெற்றிக்கு இதர ராஜஸ்தான் அணியினர் அனைவரும் சேர்த்து 85 (89) ரன்கள் எடுக்க பேட்டிங்கில் தனி ஒருவனாக 56* (31) ரன்கள் விளாசி நங்கூரமாகவும் பினிஷராகவும் செயல்பட்டு முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ரியன் பராக் ஆட்டநாயகன் விருதை வென்றார். வெறும் 20 வயது மட்டுமே நிரம்பிய இவர் கடந்த 2018 அண்டர் 19 உலகக்கோப்பையில் அசத்தியதால் 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி அவரை வாங்கியது.

அந்த தொடரில் ஒருசில போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட அவர் டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில் வெறும் 17 வருடம் 175 நாட்களில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். ஆனால் அதன்பின் தொடர்ச்சியாக ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்காத காரணத்தால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார்.

- Advertisement -

ஆனால் 2 வருடங்களுக்கு பின் நேற்றைய இக்கட்டான சூழ்நிலையில் அசத்தலான அரைசதம் விளாசிய அவர் பீல்டிங்கில் 4 கேட்ச்களையும் பிடித்தார். இதன் வாயிலாக ஐபிஎல் ஒரே போட்டியில் அரைசதம் மற்றும் 4 கேட்ச்களை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ஜேக் காலிஸ், டெக்கானுக்கு எதிராக, 2011.
2. ஆடம் கில்கிறிஸ்ட், சென்னைக்கு எதிராக, 2012
3. ரியன் பராக், பெங்களூருவுக்கு எதிராக, 2022*

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக சதமடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் – பட்டியல் இதோ

வெறும் 20 வயது மட்டுமே நிரம்பிய இவரின் நேற்றைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் என்னதான் கலாய்த்தாலும் இவரிடமும் ஏதோ ஒரு திறமை உள்ளது என்று நீண்ட நாட்களுக்குப்பின் பாராட்டினர்.

Advertisement