அச்சுஅசல் ஹர்டிக் பாண்டியா போலவே காட்சியளிக்கும் WWE வீரர். அவரே வெளியிட்ட பதிவு – யார் அவர்?

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக தோற்றுவிக்கப் பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத போதிலும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் அணி நிர்வாகம் அவரை 15 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கி கேப்டனாக நியமனம் செய்துள்ளது.

இவருடன் உலகின் நம்பர் ஒன் டி20 சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கான் மற்றும் வளர்ந்து வரும் இளம் இந்திய வீரர் சுப்மன் கில் ஆகியோரையும் அந்த அணி நிர்வாகம் முதல் வீரர்களாக தேர்வு செய்துள்ளது. இவர்களுடன் ஜேசன் ராய், மேத்தியூ வேட், லாக்கி பெர்குசன் போன்ற பல தரமான வீரர்கள் அந்த அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.

- Advertisement -

கேப்டன் ஹர்டிக் பாண்டியா:
கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி தலைமையில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட்டில் காலடி வைத்த ஹர்திக் பாண்டியா கடினமான உழைப்பால் படிப்படியாக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடத் துவங்கினார். மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை அடித்து போட்டியை வெற்றிகரமாக இந்தியாவின் பக்கம் பினிஷிங் செய்யும் திறமை பெற்ற அவர் பந்துவீச்சிலும் பட்டைய கிளப்பினார்.

குறிப்பாக 2017ஆம் ஆண்டு பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் தோல்வி உறுதி என தெரிந்த போதிலும் மனம் தளராமல் கடைசிவரை தனி ஒருவனாக நின்று சிக்சர்களை பறக்க விட்ட அவர் இந்தியாவின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடினார். நாளடைவில் டெஸ்ட் உட்பட இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டிலும் முக்கிய ஆல்-ரவுண்டராக உருவெடுத்த அவர் கபில் தேவுக்கு பின் ஒரு நல்ல வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையை இந்திய ரசிகர்களுக்கு ஊட்டியுள்ளார்.

- Advertisement -

மல்யுத்த வீரராக பாண்டியா:
பொதுவாகவே உடற்பயிற்சிக் கூடங்களில் கடுமையாக உழைத்து தனது உடலை கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும் ஒரு இந்திய வீரர்களில் ஒருவராக ஹர்திக் பாண்டியா விளங்குகிறார். குறிப்பாக 6 பேக் உடல் கட்டுகளை வெளிப்படுத்தும் வண்ணம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதும் வைரலாகும் ஒன்றாக இருந்து வருகிறது. கிரிக்கெட்டை போலவே டபிள்யூடபிள்யூஈ (WWE) எனப்படும் மல்யுத்த விளையாட்டுக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிக பட்டாளங்கள் உள்ளனர்.

குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக நடைபெறும் இந்த விளையாட்டுக்கு இந்தியாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அந்த மல்யுத்த விளையாட்டில் தற்போது விளையாடி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த மல்யுத்த வீரரான “கார்மெலோ ஹேய்ஸ்” பார்ப்பதற்கு அச்சு அசலாக இந்தியாவின் ஹர்திக் பாண்டியாவை போலவே தென்படுகிறார். சொல்லப்போனால் சட்டென அவரை பார்க்கும் இந்தியாவில் இருக்கும் பல WWE ரசிகர்கள் “இது ஹர்டிக் பாண்டியா ஆயிற்றே, இவர் எப்போது மல்யுத்த விளையாட்டில் பங்கேற்க சென்றார்” என அடையாளம் காண முடியாமல் கேட்கத் துவங்கி உள்ளார்கள்.

ட்விட்டரில் ட்ரெண்ட்:
ஒரு கட்டத்தில் இது இது பற்றி பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசத் துவங்கினார்கள். குறிப்பாக ஒரு சில ரசிகர்கள் “கார்மெலோ ஹேய்ஸ்” மற்றும் “ஹர்திக் பாண்டியா” ஆகியோரின் புகைப்படங்களை ஒரே போட்டோவில் இணைத்து சட்டென பார்த்தால் முதல் பார்வையில் அடையாளம் காணாத அளவுக்கு ஒரு புதிய புகைப்படத்தை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இது ட்விட்டரில் ட்ரெண்ட்டாக மாறியதால் அந்தப் புகைப்படம் கார்மெலோ ஹேய்ஸ் கவனத்திற்கு சென்றது. அதை பார்த்த அவர் ஏறக்குறைய தம்மைப் போலவே பாண்டியா இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்து வியந்து போனாதாக தெரிகிறது. இறுதியில் அது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியது பின்வருமாறு. “ஹர்டிக் பாண்டியா என்னை இந்தியாவில் ட்ரெண்ட் செய்துள்ளார். அன்புக்கு நன்றி” என அமெரிக்காவிலிருந்து ஆச்சரியத்துடன் பதிவிட்டுள்ளார். அவரின் அந்த ட்வீட் மற்றும் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இந்திய ரசிகர்களிடையே மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Advertisement