இதெல்லாம் நியாயமே இல்ல. சூரியகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க கூடாது – ரசிகர்கள் காட்டம்

SKY-1
- Advertisement -

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான 57-வது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது 218 ரன்களை குவிக்க பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 191 ரன்களை மட்டுமே குவித்தது.

SKY

- Advertisement -

இதன் காரணமாக 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 218 ரன்களை குவிக்க மிக முக்கிய காரணமாக சூரியகுமார் யாதவ் திகழ்ந்தார்.

அதன்படி இந்த இன்னிங்ஸில் 49 பந்துகளை சந்தித்த சூரியகுமார் யாதவ் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 103 ரன்கள் குவித்ததால் மும்பை அணி 218 என்ற பெரிய ஸ்கோரை குவித்தது. இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் சூரியகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் ரஷீத் கானுக்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Rashid Khan

ஏனெனில் மும்பை அணி 218 என்கிற பெரிய ரன்களை குவித்திருந்தாலும் பந்துவீச்சில் ரஷீத் கான் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 7.50 என்கிற எக்கனாமியில் 30 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதேபோன்று பேட்டிங்கிலும் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய சேசிங்கின் போது 103 ரன்களுக்கே குஜராத் அணி 8 விக்கெட்டை இழந்து தவித்த போதிலும் எட்டாவது வீரராக களம்புகுந்த ரஷீத் கான் எந்த நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் 31 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி என 79 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையும் படிங்க : IPL 2023 : மே 12 எங்களோட நாளா அறிவிங்க – அந்த நாளில் வரலாற்றில் 1 கோப்பை வென்று எதிரணிகளை துவம்சம் செய்து வரும் மும்பை

இப்படி பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் அதிரடியாக 79 ரன்களையும் குவித்த அவருக்கே ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த போட்டியில் குஜராத் அணி தோல்வி அடைந்திருந்தாலும் அவருக்கு தான் ஆட்டநாயகன் விருது சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement