IPL 2023 : மே 12 எங்களோட நாளா அறிவிங்க – அந்த நாளில் வரலாற்றில் 1 கோப்பை வென்று எதிரணிகளை துவம்சம் செய்து வரும் மும்பை

- Advertisement -

பரபரப்பான போட்டிகளுடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு த்ரில்லர் விருந்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 12ஆம் நடைபெற்ற 57வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை தங்களது சொந்த ஊரில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை இந்தியன்ஸ் 7வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை 80% உறுதி செய்துள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 360 டிகிரியிலும் அட்டகாசமாக பேட்டிங் செய்து 11 பவுண்டரி 6 சிக்சருடன் முதல் ஐபிஎல் சதத்தை அடித்து 103* (49) ரன்கள் குவித்து 20 ஓவர்களில் 218/5 ரன்கள் சேர்க்க உதவினார்.

- Advertisement -

குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சகா 2, ஹர்திக் பாண்டியா 4, சுப்மன் கில் 6, விஜய் சங்கர் 29, அபினவ் மனோகர் 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாகுறைக்கு டேவிட் மில்லரும் 41 (26) ரன்களில் அவுட்டானதால் கடைசியில் ரசித் கான் முழுமூச்சுடன் வெறித்தனமாக 3 பவுண்டரி 10 சிக்சருடன் 79* (32) ரன்கள் குவித்து போராடியும் வெற்றி காண முடியவில்லை.

மே 12 மும்பை நாள்:
அந்தளவுக்கு ஆரம்பத்திலேயே பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசமாக்கிய மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்டுகளையும் பியூஸ் சாவ்லா மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர். அதன் வாயிலாக சேசிங் செய்வதற்கு பெயர் போன குஜராத்தை ஐபிஎல் தொடரில் 2 முறை இலக்கை வெற்றிகரமாக எட்ட விடாமல் தோற்கடித்த முதல் அணியாக மும்பை அசத்தியுள்ளது.

MI vs GT Rashid Khan

அத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து மிரட்டலாக செயல்பட்டு வரும் குஜராத் இந்த சீசனில் இதுவரை எதிரணியின் சொந்த மண்ணில் களமிறங்கிய 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று வந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் அதை உடைத்த மும்பை தங்களது சொந்த ஊரில் குஜராத்தை தோற்கடித்து அசத்தியது. அதை விட மே 12ஆம் தேதி ஐபிஎல் வரலாற்றில் களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் மும்பை தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்து வருகிறது. அந்த தேதியில் முதல் முறையாக கடந்த 2009ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை 2012 சீசனில் அதே மே 12இல் கொல்கத்தாவுக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

அதை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு மே 12இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மும்பை 2019 சீசனில் அதே மே 12ஆம் தேதி பரம எதிரியான சென்னையை மாபெரும் ஃபைனலில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து 4வது கோப்பையை வென்றதை யாராலும் மறக்க முடியாது. அந்த போட்டிக்கு பின் மீண்டும் 2022 சீசனில் மே 12ஆம் தேதி சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை நேற்று சூரியகுமாரின் அட்டகாசமான ஆட்டத்தால் குஜராத்தையும் தோற்கடித்தது.

Shardul Thakur

அதாவது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மே 12ஆம் தேதி களமிறங்கிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காமல் மும்பை தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக அன்றைய நாளில் பரம எதிரியான சென்னையை 2 போட்டியில் வீழ்த்தி அதில் ஒரு முறை ஃபைனலில் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையையும் வென்றுள்ளது.

இதையும் படிங்க:MI vs GT : பர்ஸ்ட் பேட்டிங் பண்ணாலும் என்னோட மைன்ட் செட் இதுதான் – ஆட்டநாயகன் சூரியகுமார் யாதவ் பேட்டி

மொத்தத்தில் மே 12ஆம் தேதி என்பது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகவும் ராஜாங்கம் நடத்தும் நாளாகவும் இருந்து வருகிறது. அதனால் ஐபிஎல் வரலாற்றில் மே 12ஆம் தேதியை மும்பை இந்தியன்ஸ் நாளாக அறிவியுங்கள் என்று அந்த அணி ரசிகர்கள் கெத்தாக பேசி வருகின்றனர்.

Advertisement