ஐசிசி அம்பயர் மன்னிப்பு கேட்டாரு பாருங்க.. பாகிஸ்தான் வெளியிட்ட உருட்டு.. உடைத்த இந்திய ரசிகர்கள்

Andy Pycroft
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபித்தது.

இருப்பினும் அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய அணி கை கொடுக்காதது சர்ச்சையை உண்டாக்கியது. சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்போட்டியில் டாஸ் வீசிய பின்பும் போட்டி முடிந்த பின்பும் பாகிஸ்தானுக்கு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கை கொடுக்காமல் வெளியேறியது.

- Advertisement -

மன்னிப்பு கேட்ட நடுவர்:

அதனால் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் வாரியம் ஐசிசியிடம் இந்திய அணி மீது புகார் செய்தது. அத்துடன் போட்டி துவங்கும் முன் “பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக கை கொடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று இரு அணி கேப்டன்களிடம் நடுவர் ஆண்டி ஃபைகிராப்ட் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாகவும் பாகிஸ்தான் வாரியம் குற்றம் சாட்டியது. எனவே அவரை நீக்காவிட்டால் ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறுவோம் என்றும் பாகிஸ்தான் வாரியம் தெரிவித்துள்ளது.

அதை ஐசிசி விசாரித்ததில் எம்சிசி விதிமுறைப்படி போட்டி முடிந்த பின் கை கொடுப்பது கட்டாயம் என்று சொல்லப்படவில்லை. எனவே சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி மீது ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் பாகிஸ்தான் கூறுவது போல ஆண்டி ஃபைகிராப்ட் விதிமுறையை மீறவில்லை என்பதும் தெரிய வந்தது.

- Advertisement -

பாகிஸ்தானின் உருட்டு வீடியோ:

எனவே ஆசியக் கோப்பையிலிருந்து அவரை நீக்கும் பாகிஸ்தானின் கோரிக்கையையும் ஐசிசி நிராகரித்திருந்தது. அந்த நிலையில் அமீரகத்துக்கு எதிராக நேற்று துபாயில் பாகிஸ்தான் விளையாடிய போட்டி 8 மணிக்கு துவங்குவதாக இருந்தது. அப்போட்டியிலிருந்து தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாததால் பாகிஸ்தான் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகின.

அப்போது ஆண்டி ஃபைகிராப்ட் தமது செயலுக்கு பாகிஸ்தான் சகேப்டன் ல்மான் ஆகா மற்றும் மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டதாக அந்நாட்டு வாரியம் தெரிவித்தது. அதனால் அமீரகத்துக்கு எதிரான போட்டியில் 1 மணி நேரம் தாமதமாக பாகிஸ்தான் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்கு ஆதாரமாக சல்மான் ஆகா, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், மேனேஜர் ஆகியோருடன் பைக்ராஃப்ட் அவர்கள் பேசும் வீடியோவையும் பாகிஸ்தான் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பும்ரா மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக வருண் சக்ரவர்த்தி – நிகழ்த்திய சாதனை

அந்த வீடியோவில் நடுவர் மன்னிப்பு கேட்டதாலேயே தாங்கள் தொடர்ந்து விளையாடுவதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. ஆனால் அந்த வீடியோவில் ஒலி சுத்தமாக அணைக்கப்பட்டிருந்ததால் ஃபைகிராப்ட் மன்னிப்பு கேட்டது யாருக்கும் கேட்கவில்லை. மேலும் அந்த வீடியோயில் ஃபைகிராப்ட் சாதாரணமாக பேசுகிறாரே தவிர எங்கேயும் மன்னிப்பு கேட்பது போல் பவ்யமாக பேசவில்லை. அதனால் நடுவர் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் வாரியம் வெளியிட்டுள்ள வீடியோ வெறும் உருட்டு என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement