- Advertisement -
இந்திய கிரிக்கெட்

1971 விதிமுறை தெரியாமல் தேசியக் கொடியை அவமானப் படுத்திய ரோஹித் சர்மா? அறிவுறுத்தம் ரசிகர்கள்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் அசத்திய இந்தியா 8 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது.

அத்துடன் 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளையும் இந்தியா உடைத்தது. அப்படி போராடி சரித்திர வெற்றியைப் பெற்றதால் ஹர்டிக் பாண்டியா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் மைதானத்திலேயே ஆனந்தக் கண்ணீர் விட்டனர். மேலும் கேப்டன் ரோஹித் சர்மா தமக்கு சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த பார்படாஸ் மண்ணில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை நாட்டினார்.

- Advertisement -

ரசிகர்கள் அறிவுரை:
அத்துடன் பார்படாஸ் மண்ணை கொஞ்சம் திண்ண அவர் வரலாற்று வெற்றியை கொடுத்த மண்ணுக்கு மரியாதையும் செய்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் பார்படாஸ் மண்ணில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை நாட்டிய புகைப்படத்தை ரோகித் சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரொபைல் பிக்சராக மாற்றியுள்ளார்.

இந்தியாவுக்காக கோப்பையை வென்ற புகைப்படத்தை கூட பதிவிடாத அவர் தேசியக்கொடியை போராடி நிலை நாட்டியதை பெருமையாக உணர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இருப்பினும் அதைப் பார்க்கும் ஒருதரப்பு ரசிகர்கள் உங்களுடைய நாட்டுப்பற்று புரிகிறது. அதற்காக தேசிய கொடியை அவமானப்படுத்தலாமா? என்று ரோஹித் சர்மாவுக்கு பதிலளித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அரசின் தேசியக் கொடி அவமதிப்பை தடுக்கும் சட்டம் 1971இன் படி. “கொடியை வேண்டுமென்றே தரையோடு தரையாகவோ அல்லது தண்ணீரில் தடம் பிடிப்பதையோ அனுமதிக்கக் கூடாது” என்ற விதிமுறை இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது ரோஹித் சர்மா பார்படாஸ் மண்ணில் கொடியை நாட்டும் போது பிடிப்பு உயரமாக இல்லாததால் அதன் பெரும்பாலான பகுதி தரையில் உள்ளது.

இதையும் படிங்க: இலங்கை தொடரில் ரோஹித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு.. அப்படின்னா கம்பேக் எப்போது? வெளியான தகவல்

எனவே ரோஹித் சர்மா இந்த புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். சொல்லப்போனால் 2018ஆம் ஆண்டு ஒரு ரசிகர் தோனியை சந்திப்பதற்காக களத்திற்குள் தேசிய கொடியுடன் ஓடி வந்தார். அப்போது தன்னுடைய காலில் விழுந்த அந்த ரசிகர் கொடியை கீழே விட்டார். ஆனால் அடுத்த நொடியே கொடியை கீழே விடாமல் தோனி கையிலெடுத்து உயர்த்தினார். எனவே அறியாமல் பதிவிட்ட அந்த புகைப்படத்தை ரோகித் சர்மா நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

- Advertisement -