டி20 உலககோப்பை : ஏற்கனவே டீம் செம ஸ்ட்ராங். இப்போ இவர் வேற வந்துட்டாரு – கப் ஜெயிச்சிடுவாங்களோ

INDvsPAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்க உள்ள ஐசிசி டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த டி20 உலக கோப்பை தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அதோடு இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்பதால் அடுத்த ஒரு மாதத்திற்கு நல்ல பொழுதுபோக்கு காத்திருக்கிறது.

ICC T20 World Cup

- Advertisement -

அதோடு இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் என்னென்ன ஆச்சரியங்களை தரப்போகிறது என்பதை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேவகையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் குறித்த சுவாரசியமான தகவல்கள் பல்வேறு வகையில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகவே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் அணியானது இம்முறை டி20 உலக கோப்பையை குறிவைத்து பாபர் அசாம் தலைமையில் விளையாட உள்ளது.

Fakhar

பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரால் மிக பலம் வாய்ந்ததாக இருந்தாலும் மிடில் ஆர்டரில் அந்த அணியால் சமீபத்தில் ரன் குவிக்க முடியவில்லை என்ற ஒரு குறை மட்டும் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் காயம் காரணமாக அண்மையில் அணியிலிருந்து விலகியிருந்த பகார் சமான் மீண்டும் இணைந்துள்ளார்.

- Advertisement -

அதிரடி ஆட்டக்காரரான பகார் சமான் டாப் ஆர்டரில் களமிறங்கி மிடில் ஓவர்களில் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்க கூடிய ஒரு அதிரடியான பேட்ஸ்மேன். அவருடைய இந்த வருகை தற்போது பாகிஸ்தான் அணிக்கு மேலும் பலத்தை அதிகரித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான அணியில் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சரியான ஆல்ரவுண்டர்கள் என அற்புதமான கலவையில் அந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அந்த டீமை மட்டும் சாதாரணமா நினைக்காதீங்க. அவங்களும் டேஞ்சர் தான் – எச்சரித்த கம்பீர்

இந்நிலையில் தற்போது பகார் சமானின் வருகை அந்த அணிக்கு பலம் சேர்த்துள்ளதால் நிச்சயம் இந்த உலகக்கோப்பை தொடரில் பல அணிகளுக்கு பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அளித்து கோப்பையை வெல்ல கூட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement