பெங்களூரு ரசிகர்களின் இந்த செயல் எங்களை நெகிழவைத்தது – ஆர்.சி.பி கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

Faf
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 14 சீசன்களில் வெற்றிகரமாக முடிவடைந்த வேளையில் தற்போது 15வது சீசனும் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகளாக மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறையும், சென்னை அணி 4 முறையும் என முதல் இரு இடங்களில் உள்ளன. ஐபிஎல் வரலாற்றில் இருபெரும் ஜாம்பவான் அணிகளாக பார்க்கப்படும் மும்பை, சென்னை ஆகிய அணிகளுக்கு அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற அணியாக பெங்களூரு அணி பார்க்கப்படுகிறது.

RCB Faf Du Plessis

- Advertisement -

கடந்த 14 ஆண்டுகளாக பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றாத நிலையில் இந்த ஆண்டு நிச்சயம் டூபிளெஸ்ஸிஸ் தலைமையில் கோப்பையை கைப்பற்றும் என்று இந்த ஆண்டும் பெங்களூரு அணியின் ரசிகர்கள் அவர்களுக்கு பேராதரவு அளித்து வந்தனர். அந்தவகையில் பெங்களூரு அணி லீக் போட்டிகளின் முடிவில் சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதேபோன்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் அவர்களை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியது. இதன் காரணமாக இம்முறை எப்படியாவது பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்த வேளையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூர் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக தற்போது 15வது சீசனாக பெங்களூர் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டுள்ளது.

faf 1

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தோல்வி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பெங்களூரு அணிக்கு இருக்கும் ரசிகர்கள் உணர்வு பூர்வமாக அணியை நேசிக்கின்றனர். ஏனெனில் நான் இந்த அணியில் புதிதாக இணைந்தபோது அவர்கள் என் மீது அளவு கடந்த அன்பினை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி டெல்லி மற்றும் மும்பை அணி மோதிய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூர் அணிக்கு வாய்ப்பு என்கிற வேளையில் அனைவரும் ஆர்சிபி ஆர்சிபி என்று மைதானத்தில் முழக்கமிட்ட போது எனக்கு மட்டுமின்றி எங்களது வீரர்களுக்கு மத்தியிலும் அவர்களது அந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் ஆர்சிபி அணிக்கு ஆதரவு இருக்கிறது.

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணியிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறிய பின்னர் தினேஷ் கார்த்திக் – பகிர்ந்த முதல் பதிவு

இதுபோன்ற டீமுக்கு ரசிகர்களின் ஆதரவு என்பது முக்கியமான ஒன்று. அந்த வகையில் பெங்களூர் அணி ஒரு சிறப்பான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. நிச்சயம் நான் ஒவ்வொரு ஆர்.சி.பி ரசிகருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் என டூபிளெஸ்ஸிஸ் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement