ராஜஸ்தான் அணியிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறிய பின்னர் தினேஷ் கார்த்திக் – பகிர்ந்த முதல் பதிவு

Karthik-1
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி இருந்தார். அந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் இடம் பெற்று தவித்து வருகிறார். தற்போது முப்பத்தி ஆறு வயது பூர்த்தி அடைந்த அவரது கிரிக்கெட் கரியர் அதோடு முடிந்து விட்டது என்று அனைவரும் கருத்துக்களை பகிர துவங்கினர்.

karthik

- Advertisement -

இந்நிலையில் தனது கிரிக்கெட் இன்னும் முடிந்து போகவில்லை என்று அறிவித்த தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் : இந்த வருட ஐபிஎல் தொடரில் நான் எனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிச்சயம் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதுமட்டுமின்றி அடுத்து வரும் 2 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவது மட்டுமின்றி இந்திய அணிக்கு கோப்பையை கைப்பற்றி கொடுக்க விரும்புகிறேன் என்று தனது ஆசையை வெளிப்படையாக அறிவித்து இருந்தார்.

அவர் கூறியபடியே நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக தேர்வாகி இருந்த தினேஷ் கார்த்திக் அந்த அணிக்காக பினிஷர் ரோலில் களமிறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பின் வரிசையில் களமிறங்கிய கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட் உடன் இந்த தொடர் முழுவதுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் அடுத்துவரும் இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான குவாலிபயர் போட்டியில் பின் வரிசையில் களமிறங்கிய அவர் பெரிய அளவில் அடிக்க முடியாமல் 7 பந்துகளில் ஆறு ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் விழுந்தது நேற்று பெங்களூர் அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் பெங்களூரு அணியுடன் எடுத்துக் கொண்ட இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்த தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்துகொண்ட கருத்தில் : இன்றைய போட்டியில் நாங்கள் நினைத்த ரிசல்ட் எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் ஒரு அணியாக நாங்கள் விளையாடிய விதம் பெருமையாக இருக்கிறது. இந்த வருடம் பெங்களூர் அணி பயமற்ற அற்புதமான விளையாட்டை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தியது.

இதையும் படிங்க : 13 வருடம் கழித்து இந்த இடத்திற்கு வந்துள்ள ராஜஸ்தான் ! வார்னே ஆசியுடன் மீண்டும் அதே 2008 மேஜிக் நிகழுமா?

எங்கள் அணியில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு வீரர்களுக்கும், ஒவ்வொரு நிர்வாகிக்கும், அதேபோன்று ஆர்சிபி அணியின் ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். அதோடு இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு இன்னும் பலமாக வருவோம் என்றும் உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை என்றும் தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement