தோனி இதை பண்ணாரு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு – மனம்திறந்த பெங்களூரு கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்

Faf
Advertisement

ஐபிஎல் தொடரில் எப்போதெல்லாம் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றதோ அப்போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதே போன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதினாலும் அதே அளவு ஆரவாரம் இருக்கும். ஏனெனில் சாம்பியன் அணியான சிஎஸ்கே அணியும், ஆண்டுதோறும் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் பெங்களூரு அணியும் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடும் போது இரு அணியின் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய கலவரமே இருக்கும் என்று கூறலாம்.

cskvsrcb

அந்த அளவிற்கு இவ்விரு அணியின் ரசிகர்களும் இந்த இரு அணிகள் மோதும் போதும் சமூக வலைத்தளத்தில் மோதிக் கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. ஏற்கனவே இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

ஏற்கனவே இந்த ஆண்டு முதல் 8 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று திண்டாடிய வேளையில் தற்போது மீண்டும் தோனியின் தலைமையில் சி.எஸ்.கே அணி விளையாடி வருகிறது. அதேபோன்று சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறிய டூபிளெஸ்ஸிஸ் தற்போது பெங்களூர் அணிக்காக கேப்டன் பதவி வகித்து விளையாடி வருகிறார்.

Ravindra Jaddeja MS Dhoni

எனவே தோனி மற்றும் டு பிளேசிஸ் ஆகியோருக்கு இடையேயான போட்டி தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக பதவியேற்றது குறித்து டூபிளெஸ்ஸிஸ் தனது வெளிப்படையான கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த சீசனில் சென்னை அணியில் நடந்தது அனைத்தும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் சீசனின் துவக்கத்தில் தோனி பதவியில் இருந்து வெளியேறினார். அதுவே என்னால் நம்பமுடியாமல் இருந்தது. ஆனால் அதை விட தற்போது பாதி சீசனில் மீண்டும் அவர் கேப்டனாக பொறுப்பினை ஏற்றது அதை விட ஆச்சரியமாக இருந்தது என்று கூறினார்.

இதையும் படிங்க : அவரையே சிக்ஸர் அடிச்சுட்டாரா சூப்பர் ! அவரை விட பெஸ்ட், ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த இளம் தமிழக வீரர்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : வெளிப்படையாக அங்கு எந்த ரகசியமும் இல்லை. தோனி இருக்கும்போது, அதுவும் அவர் கேப்டனாக இருக்கும் போது சிறந்த வீரர்களை உருவாக்குவார். சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அவரும் ஒரு பெரிய பங்கு என கூறிய டு பிளேசிஸ் சென்னை அணிக்கு எதிராக சற்று எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement