RCB vs PBKS : இன்னைக்கு கோலி கேப்டனாவும், நான் இம்பேக்ட் பிளேயராவும் ஆட காரணம் இதுதான் – டூபிளெஸ்ஸிஸ் அளித்த பதில்

Faf
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது.

RCB vs PBKS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 150 ரன்களை மட்டுமே குவித்ததால் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி டாஸ் போட வந்தது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றது. அதனை தொடர்ந்து டூப்ளிசிஸ் துவக்க வீரராக விராட் கோலியுடன் பேட்டிங் செய்ய வந்தார்.

Faf 1

அப்படி துவக்க வீரராக விளையாடிய டூபிளெஸ்ஸிஸ் 84 ரன்கள் அடித்த பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸின்போது அணியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக வைஷாக் விஜயகுமார் இம்பேக்ட் பிளேயராக விளையாடினார்.

- Advertisement -

இப்படி டூபிளெஸ்ஸிஸ் இன்றைய போட்டியில் கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக விளையாடியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவரே ஒரு பேட்டியையும் போட்டியின் போது அளித்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த இரண்டு போட்டிகளுக்கு முன்னர் நான் பீல்டிங் செய்யும் போது அடித்த டைவ் ஒன்றின் மூலம் எனக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக எனக்கு சிறிய அளவில் வலது வயிற்றில் வலி இருக்கிறது.

இதையும் படிங்க : வீடியோ : 556 நாட்கள் கழித்து கேப்டனாக வந்து கள்ளம் கபடம் இல்லாம உண்மைய உளறிய கிங் கோலி – ரசிகர்கள் கலகலப்பு

எனவே இந்த போட்டியில் பேட்டிங் செய்யும் அளவிற்கு நான் தகுதியாக இருப்பதினால் பேட்டிங் மட்டும் செய்கிறேன். இம்பேக்ட் ரூல்ஸ் வந்துள்ளதால் இந்த போட்டியில் என்னால் விளையாட முடிந்தது இல்லை என்றால் இந்த போட்டியில் நிச்சயம் பங்கேற்று இருக்க முடியாது. ஆனால் அடுத்த போட்டிக்குள் என்னுடைய வலி சரியாகி நான் மீண்டும் களத்திற்கு திரும்புவேன் என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement