சி.எஸ்.கே அணியில் எனக்கு பிடிச்ச வீரர் அவர்தான். அவரை ரொம்ப மிஸ் பண்ண போறேன் – டூபிளெஸ்ஸிஸ் நெகிழ்ச்சி

Faf
- Advertisement -

இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் துவங்க உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு நகரில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் கலந்துகொண்ட 10 அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தன. இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது. ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாகவும், கடந்த ஆண்டு கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாகவும் சென்னை அணி அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது.

CSK-2

- Advertisement -

இதன் காரணமாக எந்தெந்த வீரர்களை சி.எஸ்.கே அணி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பல இளம் வீரர்களை சிஎஸ்கே தேர்ந்தெடுத்தாலும் சில வீரர்களை அணியில் தக்க வைக்காதது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக சென்னை அணியின் முக்கிய வீரராகவும், அணியின் துவக்க வீரராகவும் விளையாடி வந்த டூபிளெஸ்ஸிஸ்-சை சென்னை அணி ஏலத்தில் தக்க வைக்காதது ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய போது கூட இவரது ஆட்டம் அந்த தொடர் முழுவதுமே பிரமாதமாக இருந்தது. எப்போதுமே சென்னை அணிக்காக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த அவரை சென்னை அணி மீண்டும் வாங்காதது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை அணி தவறவிட்ட அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அவரை 7 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

ruturaj

இதன் காரணமாக தற்போது இந்த ஆண்டு அவர் பெங்களூரு அணியில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே உடனான தனது பிணைப்பு குறித்து ஏற்கனவே பேசியிருந்த டூபிளெஸ்ஸிஸ் தற்போது சிஎஸ்கே அணியில் தனக்கு பிடித்த வீரர் குறித்து வெளிப்படையாக நெகிழ்ச்சியான கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

சிஎஸ்கே அணியில் நான் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அண்ணன் மாதிரி. அவர் மிகவும் திறமை வாய்ந்த ஒரு இளம் வீரர். நிச்சயம் இந்திய அணியில் அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது. அவருடன் நான் துவக்க வீரராக இம்முறை களம் இறங்க முடியாது. அவரை நான் இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மிஸ் செய்யப் போகிறேன். இந்த ஐபிஎல் தொடரில் ஒரு கதவு எனக்கு சிஎஸ்கே வழியாக மூடினாலும் மற்றொரு கதவு பெங்களூரு வழியாக திறந்திருக்கிறது என்று கூறினார்.

இதையும் படிங்க : சமீப காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு வந்த நடராஜனை வாங்கிய அணி எது? – எவ்வளவு தொகை தெரியுமா?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இம்முறை விராத் கோலியுடன் இணைந்து விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் இருவருமே சர்வதேச போட்டிகளில் எதிர் அணியின் கேப்டனாக இருந்து நிறைய முறை மோதி உள்ளோம். ஆனால் இப்போது ஒரே அணியில் விளையாட இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று டூபிளெஸ்ஸிஸ் கூறியுள்ளார். தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் அசத்தலான பார்மில் டூபிளெஸ்ஸிஸ் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement