IPL தொடருக்கும், PSL தொடருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பாகிஸ்தானில் இது பெஸ்ட் – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

Faf
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர்களைப் போலவே பாகிஸ்தானிலும் ஒவ்வொரு ஆண்டும் பிஎஸ்எல் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு கொரானா பரவல் காரணமாக ஒத்திவெக்கப்பட்டிருந்த அத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தையும், வருகிற 9ஆம் தேதியில் இருந்து ஐக்கிய அமீரகத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம். இந்த தொடரில் பங்குபெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் தற்போது ஐக்கிய அமீரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

psl 1

- Advertisement -

இந்நிலையில் அந்த தொடரில் க்வெட்டா கிளேடியர்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும், தென் ஆப்ரிக்கா மற்றும் ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வீரரான டியூப்ளசிஸ், பிஎஸ்எல் தொடரில் அதிக அளவிலான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதைக் கண்டு நான் ஆச்சர்யப்படுகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்,

பிஎஸ்எல் ஒரு தரம் வாய்ந்த தொடராக இருக்கிறது. இந்த தொடரில் அதிக அளவிலான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதுதான் என்னைக் கவர்ந்த விடயாமாக இருக்கிறது. தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் வீரர்கள், அங்கு அதிக அளவிலான வேகத்தில் வரும் பந்துகளை எதிர்கொண்டிருப்பார்கள். அதே போலவே இந்த பிஎஸ்எல் தொடரில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் பந்து வீச்சாளர்கள் அதிகளவில் இருப்பதைக் கண்டு நான் ஆச்சர்யப்படுகிறேன்.

faf 1

அதுவே இந்தியாவில் அதிக அளவிலான சூழல் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பிஎஸ்எல் தொடரின் உண்மையான பொக்கிஷமாக வேகப்பந்து வீச்சே இருக்கிறதென்று நான் கருதுகிறேன் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

faf 2

தற்போது பிஎஸ்எல் தொடர் நடைபெற இருக்கும் ஐக்கிய அமீரகத்தில் தான் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரும் நடத்தப்பட்டது. அந்த தொடர் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், டியூப்ளசிஸ் மட்டும் சிறப்பாக விளையாடி 13 போட்டிகளில் 449 ரன்கள் குவித்தார். ஏற்கனவே நன்கு பரிச்சையமான ஆடுகளங்கள் என்பதால் பிஎஸ்எல் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement