அவுங்க கூப்பிட்டா மட்டும் என்ன கப்பல்லயா போக முடியும். அதெல்லாம் முடியாது – டூபிளெஸ்ஸிஸ் அதிரடி

Faf
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுக்களும் முடங்கியுள்ளது. கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து என அனைத்து விளையாட்டுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .மேலும் பல நாடுகள் அடுத்த பல மாதங்களுக்கு வெளிநாட்டு போக்குவரத்தினை ஒத்திவைத்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா ,தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இந்த நிலை மீண்டும் எப்போது மாறும் என்று தெரியும்.

Cup

- Advertisement -

அதே நேரத்தில் இந்தியாவில் ஐபிஎல் தொடர் காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 தொடரின் முடிவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்த தொடர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆறு மாதங்களுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வெளிநாட்டு வீரர்களை எவ்வாறு அழைத்து விளையாடுவது என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்த நிலை குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளசிஸ் கூறுகையில் : எனக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரையில் அடுத்த ஜனவரி மாதம் வரை சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை இருக்கும் என்று தெரிகிறது. வங்கதேசம், இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைவிட ஆஸ்திரேலியா பெரிதாக பாதிக்கப்படவில்லை என்றாலும் அந்த நாட்டு மக்களின் ஆரோக்கியம் குறித்து சொல்கிறார்கள்.

faf

உலக கோப்பை தொடர் அங்கு தான் நடக்கிறது அங்கு விமானத்தில் செல்ல முடியவில்லை என்றால்.
பழைய காலத்தைப்போல படகில் செல்ல முடியாது. உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா செல்லும் முன் வீரர்கள் தங்களை இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள நான் சம்மதிக்கிறேன் என்று கூறியுள்ளார் டூபிளிஸ்சிஸ்.

faf 2

மேலும் உலகக்கோப்பை குறித்து அனைவரும் கருத்து கூறிவரும் நிலையில் தற்போது டூபிளிஸ்சிஸ் அளித்துள்ள பேட்டியில் நிலைமை சரியாகாது அதனால் எது நடந்தாலும் தயாராகுங்கள் என்பதுபோல் அவர் பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நமக்கு கிடைத்துள்ள செய்தியின் படி இந்த ஆண்டு இறுதியில் உலககோப்பை தொடர் நடைபெறாது அதற்கு பதிலாக ஐ.பி.எல் தொடர் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement