RCB vs LSG : 126 ரன்கள் மட்டுமே அடிச்சும் நாங்க ஜெயிக்க இதுவே காரணம். வெற்றிக்கு பிறகு – டூபிளெஸ்ஸிஸ் அளித்த பேட்டி

Faf-2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

RCB vs LSG

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 31 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 44 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியானது துவக்கத்திலிருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதிவரை போராடியும் கடைசியில் 19.5 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்றது.

Harshal Patel

இந்நிலையில் இந்த போட்டியில் குறைவான ரன்கள் அடித்தும் வெற்றி பெற்றது எப்படி என போட்டி முடிந்து பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : சின்னசாமி மைதானமும் லக்னோ மைதானமும் முற்றிலும் வெவ்வேறாக இருக்கிறது. முதல் ஆறு ஓவர்கள் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். அதே போன்று விளையாடி இருந்தால் நிச்சயம் எங்களது ரன் குவிப்பு அதிகமாக இருந்திருக்கும்.

- Advertisement -

முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் என்று தான் நினைக்கிறேன். அதே போன்று இந்த போட்டியில் மழைக்குப் பிறகு நானும் தினேஷ் கார்த்திக் உள்ளே செல்கையில் 135 ரன்கள் வரை அடித்தால் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம். ஆனாலும் எங்களால் 126 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இதையும் படிங்க : LSG vs RCB : காலம் கடந்த பின் வந்த ராகுல், சவாலான பிட்ச்சில் லக்னோவை குறைவான இலக்கை வைத்தே ஆர்சிபி மடக்கிய எப்படி

அதன் பின்னர் பவுலிங் செய்ய வருவதற்கு முன் பவர்பிளே ஓவர்களில் இரண்டு, மூன்று விக்கெட்டுகளை எடுத்து விட்டால் நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியும் என்று கூறினேன். அதிலும் குறிப்பாக ராகுல் இல்லாத நேரத்தில் இந்த இலக்கு அவர்களுக்கு சவாலாக இருக்கும் என்று எங்கள் வீரர்களிடம் கூறினேன். அதன்படி சிறப்பாக செயல்பட்ட எங்களது பந்துவீச்சாளர்கள் அற்புதமான வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர் என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement