இப்போதான் எல்லாமே சரியா நடக்குது.. டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

Faf
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், அக்கர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் 52 ரன்களையும், வில் ஜேக்ஸ் 41 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 57 ரன்களையும், ஷாய் ஹோப் 29 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் எங்கள் அனைவரது செயல்பாடுமே சிறப்பாக இருந்தது. முதல் பாதி தொடரில் எங்கள் வழியில் எதுவுமே செல்லவில்லை. ஆனால் தற்போது இரண்டாம் பாதியில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்குமே சரியான வழியில் அனைத்துமே நல்லதாக நடக்கிறது. ஸ்வப்னில் பவர்பிளே ஓவர்களிலேயே சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : நட்பை காட்டிய தல தோனி – சின்னத்தல ரெய்னா.. சிஎஸ்கே வீரர்களுக்கு வழங்கப்பட்ட மெடல்.. பின்னணி இதோ

அதோடு பேட்டிங்கிலும் அவரால் கை கொடுக்க முடிகிறது. அவரை தவிர்த்து வேகப்பந்து வீச்சிலும் தற்போது அனைவருமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற ஒரு ஆட்டத்தை தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். நிச்சயம் கடைசி போட்டியிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டம் தொடரும் என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement