- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே அணியில் அவங்க ரெண்டு பேருக்கு கீழ் விளையாடியதில் மகிழ்ச்சி – பாப் டூபிளெஸ்ஸிஸ்

தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனான பாப் டூபிளெஸ்ஸிஸ் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற சில சீசன்களில் முக்கிய வீரராக திகழ்ந்துள்ளார். அதனால் சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் ஒரு வீரராகவே டூபிளெஸ்ஸிஸ் இருந்து வருகிறார்.

அவங்க 2 பேருக்கு கீழ் நான் விளையாடியதில் மகிழ்ச்சி : பாப் டூபிளெஸ்ஸிஸ்

பின்னர் 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு சி.எஸ்.கே அணியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்ட வேளையில் சில ஆண்டுகள் ஆர்.சி.பி அணிக்கும் அதற்கு அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலும் இடம் பிடித்திருந்த அவர் 2026 ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போனார்.

- Advertisement -

அதே வேளையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ டி20 லீக்கில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாடி வருகிறார். இந்நிலையில் சி.எஸ்.கே அணியுடன் தனது உறவு குறித்தும், சி.எஸ்.கே அணியில் தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரது தலைமையின் கீழ் விளையாடியது குறித்தும் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : எம்.எஸ் தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் போன்ற இருபெரும் ஆளுமைக்கு கீழ் விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ஒரு வீரர் நல்ல திறனுடன் இருந்தால் அவரை நிச்சயம் அணியின் நிர்வாகம் பாதுகாக்கும். அந்த வகையில் எனக்கு சிஎஸ்கே அணி பல ஆண்டுகள் ஆதரவளித்திருக்கிறது.

- Advertisement -

எப்போதுமே இதுபோன்ற ஒரு நிர்வாகம் தொடர்ந்து வீரர்களை பாதுகாப்பது என்பது மிகவும் அரிது. அந்த வகையில் பார்க்கையில் சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் என்னை பல ஆண்டுகளாக ஆதரித்து வந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் நான் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறி இருந்தாலும் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என சி.எஸ்.கே அணியின் நிர்வாக அணிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன்.

இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவுடன் சேர்ந்து இவர் ஓபன் பண்ணா டி20 உலககோப்பை நமக்கு தான் – ராபின் உத்தப்பா கருத்து

என்னுடைய இத்தனை ஆண்டு கரியரில் நான் எத்தனையோ அணிகளில் விளையாடியிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஒரு அணியின் நிர்வாகம் கொடுக்கும் ஒரு ஆதரவை எங்கும் பார்த்தது கிடையாது என பாப் டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -