சி.எஸ்.கே அணிக்கெதிரான முதல் போட்டியிலேயே நாங்க தோக்க இதுதான் காரணம் – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Duplessis
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி மீண்டும் தங்களின் கோட்டை சேப்பாக்கம் என்பதை உரக்க சொல்லி இருக்கிறது.

மேலும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் வெற்றியையும் சென்னை அணி பதிவு இந்த தொடரை அசத்தலாக ஆரம்பித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் : எப்பொழுதுமே பவர்பிளே முடிந்து மிடில் ஓவர்களில் விளையாடுவது சற்று கடினமான ஒரு விடயம். அதிலும் சென்னை போன்ற ஒரு பலமான அணிக்கு எதிராக விளையாடும் போது மிடில் ஓவர்களில் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும்.

- Advertisement -

ஆனால் நாங்கள் இந்த போட்டியின் போது மிடில் ஓவர்களில் நிறையவே விக்கெட்டுகளை இழந்தது மட்டுமின்றி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். இந்த மைதானத்தில் முதல் 10 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய எளிதாகவே இருந்தது. ஆனாலும் அடுத்தடுத்த விக்கெட்டுகளை நாங்கள் இழந்ததன் காரணமாக ரன் வேகம் குறைந்தது.

இதையும் படிங்க : அந்த அதிர்ஷ்டம் கிடைச்சதால் தப்பிச்சேன்.. 3 – 4 நாட்கள் வேலை செஞ்சேன்.. அறிமுக சிஎஸ்கே வீரர் ரச்சின் பேட்டி

இருப்பினும் பின் வரிசையில் அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக அனுஜ் ராவத் ஒரு திறமையான வீரர் என்பதை இந்த போட்டியில் பலமாக வெளிக்காட்டி இருக்கிறார். இந்த போட்டியில் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததும் ரன்கள் குறைவாக குவித்ததுமே தோல்விக்கு காரணமாக டூபிளெஸ்ஸிஸ் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement