நான் தோனியை போன்ற கேப்டனாக இருக்கப்போவதில்லை. வெளிப்படையாக பேசிய – ஆர்.சி.பி கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்

Faf
- Advertisement -

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் கேப்டனான ஃபேப் டூப்ளிசிஸ் கடந்த ஆண்டு விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூரு அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். தான் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் பெங்களூரு அணியை பிளே ஆப் சுற்று வரை அழைத்துச் சென்றார். அதனைத்தொடர்ந்து இந்தாண்டும் பெங்களூரு அணியை வழிநடத்த காத்திருக்கிறார்.

Faf

- Advertisement -

உலகின் தலைசிறந்த பீல்டராக பார்க்கப்படும் டூப்ளிசிஸ் தென் ஆப்பிரிக்க அணியையும் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இப்படி கேப்டன் பொறுப்பினை கையாள்வதினை எங்கிருந்து கற்றுக் கொண்டேன் என்பதையும் அதனை எவ்வாறு செயல்படுத்த போகிறேன் என்பது குறித்தும் டூப்ளிசிஸ் மனம் திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் கேப்டனாக செயல்படுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நிச்சயம் நான் ஒரு கேப்டனாக கிரேம் ஸ்மித் போன்று இருக்கப்போவதில்லை. அதேபோன்று ஸ்டீபன் பிளம்மிங்கை போன்ற கேப்டனாகவும் இருக்கப் போவதில்லை. மேலும் தோனியை போன்ற கேப்டனாகவும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் கேப்டனாக நான் என்னுடைய திறன் என்ன என்பதனை ஐபிஎல் தொடரில் செய்து பார்க்க காத்திருக்கிறேன். நான் கேப்டனாக நானாகவே இருந்தால்தான் மக்கள் பார்வையில் என்னுடைய திறன் என்ன என்பது தெரியும்.

Faf

கேப்டனாக செயல்படுவது கடினம் என்றாலும் அதனை விரும்பி செய்து வரும் நான் ஒரு முன்மாதிரியான கேப்டனாக இருக்க விரும்புகிறேன் என டூப்ளிசிஸ் கூறியுள்ளார். அதேபோன்று தனது கேப்டன்சி அனுபவத்திற்கு பெரிதும் உதவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் சிஎஸ்கே அணியின் தலைவர் தோனியும் தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் சென்னை அணிக்காக என்னுடைய இளம் வயதிலேயே விளையாடும் வாய்ப்பினை பெற்றேன்.

- Advertisement -

அப்போது ஸ்டீபன் பிளமிங் போன்ற ஒரு பெரிய ஆளுமை கொண்ட நபர் எனக்கு அருகில் உட்கார்ந்திருப்பது பெரிய அளவு அனுபவத்தை அவர்களிடம் இருந்து எனக்குப் பெற்று தந்தது. நான் முதல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும்போது எப்போதுமே ஸ்டீபன் பிளமிங்கின் அருகில் தான் அமர்ந்திருப்பேன். அவரிடம் கேப்டன்சி குறித்து ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பேன். அவரும் எனக்கு நுட்பங்களை முழுவதுமாக கூறுவார். அதோடு நான் கேப்டன்சி குறித்து எவ்வளவு கற்றுக்கொள்ள நினைக்கிறேனோ அந்த அளவுக்கு அவரிடம் கேள்விகளை எழுப்புவேன்.

இதையும் படிங்க : டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக 4வது போட்டியில் பிட்ச் மாற்றம், அவரும் வரப்போறாரு – ரோஹித் சர்மா அதிரடி அறிவிப்பு

ஒரு கட்டத்தில் அவர் ” நீ சாதுரியமாக பேசி அனைத்தையும் என்னிடம் கற்றுக் கொள்ள பார்க்கிறாய்”. இங்கிருந்து போ இதற்கும் மேல் தெரிந்தால் தோனியை தாண்டி விடுவாய் என்று விளையாட்டாக கூறினார். இருப்பினும் நான் தோனியை போன்ற கேப்டனாக இல்லாமல் கேப்டனாக தனித்துவமாக இருக்க வேண்டும் என நினைப்பதாக டூபிளிஸ்சிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement