டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக 4வது போட்டியில் பிட்ச் மாற்றம், அவரும் வரப்போறாரு – ரோஹித் சர்மா அதிரடி அறிவிப்பு

Rohit Press
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் குறைந்தபட்சம் 3 வெற்றிகளை பெற்றால் தான் வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் 2 வெற்றிகளை பதிவு செய்து விட்டதால் தற்சமயத்தில் புள்ளி பட்டியல் 2வது இடத்தை பிடித்துள்ள இந்தியா பைனலுக்கு தகுதி பெறுவது 90 – 99% உறுதியாகியுள்ளது என்றே சொல்லலாம்.

WTC

- Advertisement -

முன்னதாக 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் முதல் தொடரில் விராட் கோலி தலைமையில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சக்கை போடு போட்டு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா சௌதம்ப்டன் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வழக்கம் போல சொதப்பி கோப்பையை வெல்லாமல் வெறும் கையுடன் வெளியேறியது. அந்த போட்டியில் முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டம் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பதுடன் சரியாக தயாராகவில்லை என்பது ஆரம்பத்திலேயே தோல்வியை கொடுத்தது.

ரோஹித் அறிவிப்பு:
அதாவது அந்த பைனலுக்கு முன்பாக இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு 1 – 0 (2) என்ற கணக்கில் வென்ற நியூஸிலாந்து இங்கிலாந்து கால சூழ்நிலைகளை தெரிந்துகொண்டு ஃபைனலில் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்றது. ஆனால் ஒரு வாரம் முன்பாக மட்டுமே இங்கிலாந்துக்கு பயணித்து வலைப் பயிற்சிகளை மட்டும் மேற்கொண்ட இந்தியா நேரடியாக பைனலில் களமிறங்கியது தோல்வியை கொடுத்தது.

thakur 2

அதனால் இம்முறை அதற்கு முன்கூட்டியே தயாராகும் முதல் படியாக தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் அஹமதாபாத் நகரில் நடைபெறும் 4வது போட்டியில் வேகத்துக்கு சாதகமான பிட்ச் அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப் போவதாக ரோகித் சர்மா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அத்துடன் 4வது வேகப்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் தேவை என்பதால் சர்துல் தாக்கூரை அப்போட்டியில் விளையாட வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர் 3வது போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக உள்ளது. அதற்காக நாங்கள் ஏற்கனவே பேச்சுகளை துவங்கியுள்ளோம். அதற்காக சில வீரர்களையும் நாங்கள் தயார் படுத்த உள்ளோம். குறிப்பாக ஷர்துல் தாகூர் இந்த திட்டத்தில் முக்கியமானவர். நேற்று திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது எந்தளவுக்கு தயாராக இருக்கிறார் என்பது தெரியாது. எவ்வளவு ஓவர்கள் வீசுவார் என்று தெரியாது. எனவே நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர் முடிவுகளை கொடுத்தால் நிச்சயமாகவே அகமதாபாத் போட்டியில் வித்தியாசமான திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்”

Rohit-Sharma

“கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்றது நிச்சயமாக எங்களுடைய பெரிய சாதனையாகும். கடந்த தொடரில் குறிப்பிட்ட சில வித்தியாசமான கால சூழ்நிலையில் விளையாடியது சிறப்பாக அமைந்தது. அதற்கு இந்திய மண்ணில் தயாராவது சமமாகாது என்றாலும் இங்குள்ள சூழ்நிலைகளும் அதற்கு நிகரான சவாலை கொடுக்கக் கூடியது. இங்கேயும் பேட்ஸ்மேன்கள் களமிறங்கி தொடர்ந்து பெரிய ரன்களை அடிப்பது அவ்வளவு சுலபமல்ல” என்று கூறினார். இதனால் அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் பச்சை புற்களுடன் கூடிய வேகத்துக்கு சாதகமான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அவர் கோகினூர் வைரத்தை விட பெரியவர் – சக பாகிஸ்தான் வீரரை ஓசியில் ஒப்பிட்டு பாராட்டும் சடாப் கான்

மேலும் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்துள்ள நிலையில் இங்கிலாந்து போன்ற நாடுகளில் அவசியமான 4வது வேகப்பந்து வீச்சாளர் இடத்தில் கடந்த வருடம் அறிமுகமாகி வரலாற்று சிறப்புமிக்க காபா வெற்றியிலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடைபெறப் போகும் லண்டன் ஓவல் மைதானத்தில் 2021ஆம் ஆண்டு இந்தியா பதிவு செய்த வரலாற்று வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஷார்துல் தாகூர் விரைவில் இந்திய அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement