அவர் கோகினூர் வைரத்தை விட பெரியவர் – சக பாகிஸ்தான் வீரரை ஓசியில் ஒப்பிட்டு பாராட்டும் சடாப் கான்

Shadab-Khan
- Advertisement -

பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர வீரர் பாபர் அசாம் கடந்த 2019 முதல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார். அதனால் பாகிஸ்தானின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட அவர் கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து 2022ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் வென்றார். ஆனால் 2022ஆம் ஆண்டில் அவரது தலைமையில் பெரிய அளவில் வெற்றிகளை பதிவு செய்யாத பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் தோற்று ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.

- Advertisement -

அத்துடன் சமீப காலங்களாகவே தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சுயநலத்துடன் பெரிய ரன்களை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் குவிப்பதை வழக்கமாக வைத்துள்ள பாபர் அசாம் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் அணியின் நலனுக்காக ஓப்பனிங் இடத்தை இளம் வீரர்களுக்கு கொடுத்து விட்டு மிடில் ஆர்டரில் விளையாடுமாறு வாசிம் அக்ரம், கௌதம் கம்பீர் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆலோசனைகளை மதிக்காத அவர் தொடர்ந்து தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.

கோகினூர் வைரம்:
அதனால் சமீப காலங்களாகவே விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து வரும் அவர் தற்போது நடைபெற்று வரும் 2023 பிஎஸ்எல் தொடரிலும் ஒன்று சொற்ப ரன்களில் அவுட்டாவது அல்லது பெரிய ரன்களை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுப்பது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் தடவல் பேட்டிங்கை நிறுத்தி அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் ஆகியோரை பின்பற்றுமாறு முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் ஆலோசனை தெரிவித்தது போல் தற்சமயத்தில் பாகிஸ்தானில் பாபர் அசாம் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

Misbah-ul-haq

இந்நிலையில் பிரபலமான கோகினூர் வைரத்தை விட விலைமதிப்பு மிக்க பாபர் அசாமை விமர்சிப்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக பாகிஸ்தான் வீரர் சடாப் கான் தெரிவித்துள்ளார். குறிப்பாக அவரும் மனிதன் தான் என்பதை உணர்ந்து அனைத்து நேரங்களிலும் அவரால் மெஷின் போல செயல்பட முடியாது என்பதை தெரிந்து விமர்சகர்கள் அமைதி காக்க வேண்டும் என்று சடாப் கான் கேட்டுக் கொண்டுள்ளார். பிஎஸ்எல் படத்தில் தமது தலைமையிலான இஸ்லாமாபாத் அணி பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் அணியை தோற்கடித்த பின் தம்முடைய தேசிய அணியின் கேப்டனுக்கு சடாப் கான் ஆதரவு கொடுத்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வைரத்தை போன்ற அவருக்கு எதிராக நாம் அநியாயமாக விமர்சிக்கிறோம் என்று நினைக்கிறேன். பெரிய வைரத்தைப் போன்ற அவர் கிடைத்ததற்கு பாகிஸ்தான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன கேட்டால் கோஹினூர் வைரத்தை விட பாபர் அசாம் மிகப்பெரிய வைரம். ஒரு தேசமாக நாம் அவரை மதிப்பிடாமல் அழுத்தத்தை கொடுக்கிறோம்”

shadab 1

“இறுதியில் அவரும் மனிதர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உலகம் எப்படி அவரை மதிக்கிறதோ அதே போல் நாமும் மதிக்க வேண்டும். அவரைப் போன்ற ஒருவரின் கேப்டன்ஷிப் பற்றி சிலர் விமர்சிப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவர் பாகிஸ்தானின் மிகப்பெரிய வீரர். எனவே பாகிஸ்தான் அணியில் நாங்கள் அவரை மதிப்பது போல் நம்முடைய நாட்டில் இருப்பவர்களும் மதிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : அர்ப்பணிப்புடன் காயமடைந்த சுப்மன் கில், மனசாட்சியின்றி விமர்சித்த கவாஸ்கர் – நேரலையில் மேத்தியூ ஹெய்டன் பதிலடி

இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் இந்தியாவின் பொக்கிஷத்தை இங்கிலாந்து அரசிக்கு பரிசாக கொடுத்த கோஹினூர் வைரத்துடன் பாபர் அசாமை ஒப்பிடுவது சரியா என்று பதிலடி கொடுக்கிறார்கள். குறிப்பாக உங்களது நாட்டில் உள்ள ஏதோ ஒரு சொத்துடன் ஒப்பிடுங்கள் மாறாக எங்களது நாட்டின் கோகினூர் வைரத்தை ஓசியில் ஒப்பிட்டு பெருமை பேசாதீர்கள் என்றும் இந்திய ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement