IND vs AUS : அர்ப்பணிப்புடன் காயமடைந்த சுப்மன் கில், மனசாட்சியின்றி விமர்சித்த கவாஸ்கர் – நேரலையில் மேத்தியூ ஹெய்டன் பதிலடி

Sunil Gavaskar Gill
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. மறுபுறம் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த நிலைமையில் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்களை சாய்த்தார். முன்னதாக இந்த தொடர் மட்டுமல்லாமல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த கேஎல் ராகுல் இந்த போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில் அனைவரும் எதிர்பார்த்தத சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ஹெய்டன் பதிலடி:
கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சதமும் இரட்டை சதமும் அடித்து உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் இந்த போட்டியிலும் ஆரம்பத்திலேயே 3 பவுண்டரியுடன் அதிரடியாக 21 (18) ரன்களை 116.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அவுட்டானார். ரோகித் சர்மா உள்ளிட்ட பல இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய பிட்ச்சில் 2வது அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அவர் 20, 15, 1 என இந்த தொடரில் ராகுல் விளையாடிய இன்னிங்ஸ்களை விட சிறப்பாகவே பேட்டிங் செய்தார் என்று சொல்லலாம்.

அதை விட கேமரூன் க்ரீன் வீசிய 7வது ஓவரின் 4வது பந்தில் சிங்கிள் எடுக்க வேகமாக ஓடி டைவ் அடித்த அவர் 1 ரன் எடுத்தார். அப்போது அவரது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் மருத்துவ குழுவினர் வந்து முதலுதவி செய்தனர். மொத்தத்தில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது இடத்தை பற்றி கவலைப்படாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவரை ரசிகர்கள் பாராட்டுகின்றனர். ஆனால் அந்த ஓவரின் கடைசி 2 பந்துகள் முடிந்த பின் சுப்மன் கில் பொறுமையாக விளையாடி விட்டு ஓவர் இடைவெளியில் முதலுதவி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நேரலையில் வர்ணனை செய்த சுனில் கவாஸ்கர் மனசாட்சியின்றி விமர்சித்தார்.

- Advertisement -

அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் செய்த வேளையில் உள்ள சிறிய தவறை நாம் பார்க்க வேண்டும். அவர் டைவ் அடித்து சிங்கிள் எடுத்தார். ஆனால் என்னை கேட்டால் ஓவர் முடியும் வரை அவர் காத்திருந்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த ஓவரை வீசும் வேகப்பந்து வீச்சாளருக்கு இருக்கும் வெப்பத்தில் நீங்கள் சுவாசிக்க தேவையான நேரம் கொடுக்க வேண்டும். அதற்காக நீங்கள் காயத்தை சந்தித்துள்ளீர்கள். ஆனால் 2 பந்துகள் காத்திருந்திருக்கலாம். ஓவர் முடிந்த பின் முதலுதவி எடுத்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் கடைசி 2 பந்துகளில் பந்தை எதிர்கொள்ளாத திசையில் தான் நீங்கள் இருப்பீர்கள்” என்று கூறினார்.

அதற்கு நீங்கள் மனசாட்சியற்றவர் என்ற வகையில் அருகில் இருந்து வர்ணனை செய்த மேத்தியூ ஹெய்டன் பதிலடி கொடுத்தது பின்வருமாறு. “நீங்கள் ஒரு கடுமையான மனிதர் கவாஸ்கர். அது ஒரு உண்மையான மோசமான காயமாகும்” என்று கூறினார். அதற்கு கவாஸ்கர் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: IND vs AUS : இந்தியாவை சுருட்டிய ஆஸ்திரேலியா, ஜாம்பவான் ஷேன் வார்னேவை மிஞ்சிய நேதன் லயன் – புதிய வரலாற்று சாதனை

“ஆம் ஆனால் நாட்டுக்காக விளையாடும் நீங்கள் வலியை பொறுத்துக் கொண்டு 2 பந்துகள் விளையாடி நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் பந்தை எதிர்கொண்டால் அசவுகரியமாக உணரலாம். ஆனால் எதிர்ப்புறம் இருக்கும் போது அந்த முதலுதவியை 2 பந்துக்கு பின்னர் எடுத்திருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement