அடுத்த போட்டியில் சி.எஸ்.கே அணியில் இவர் விளையாட வாய்ப்பில்லையா ? – இதை கவனிச்சீங்களா ?

CSK
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 47-வது போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் அபார சதம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது.

cskvsrr

- Advertisement -

அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களான லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் பவர்ப்ளே 6 ஓவர்களில் 81 ரன்களை குவித்தனர். அதன் பின்னர் வந்த சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் நிலைத்து நின்று விளையாட இறுதிகட்டத்தில் சஞ்சு சாம்சன் 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக விளையாடிய ஷிவம் துபே 64 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை இன்னும் தக்கவைத்துள்ளது. அதேவேளையில் இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் சிஎஸ்கே அணிக்கு பெரிய பாதிப்பு இல்லாமல் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது.

Faf

இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் லீக் சுற்று போட்டிகளில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் அடுத்த போட்டியில் சீனியர் வீரரான டு பிளிசிஸ் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 25 ரன்களில் ஆட்டமிழந்த அவர் அதற்கு முன்னதாக ரன் ஓடும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜூர் ரஹ்மான் மீது பலமாக மோதினார்.

- Advertisement -
faf
Faf CSK

அதன் காரணமாக அவருக்கு கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டது. ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தலையில் அடிபட்டு கண்கஷனில் இருந்த அவர் கரிபியன் பிரீமியர் லீக் போட்டியின் போதும் அந்த காயத்தினால் ஏற்பட்ட விளைவுகளால் கடுமையான வலியில் இருந்தார். இந்நிலையில் மீண்டும் அதே கழுத்துப் பகுதியில் அவருக்கு அடிபட்ட்டுள்ளதால் நிச்சயம் அடுத்த போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இவர் விளையாடன வரைக்கும் போதும். உடனே டீம்ல இருந்து தூக்குங்க – சி.எஸ்.கே ரசிகர்கள் கொதிப்பு

ஏனெனில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து ஆட்டமிழந்து வெளியேறிய அவர் இரண்டாவது இன்னிங்சின் போது பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா நேற்று பீல்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement