இவர் விளையாடன வரைக்கும் போதும். உடனே டீம்ல இருந்து தூக்குங்க – சி.எஸ்.கே ரசிகர்கள் கொதிப்பு

CSK-1
Advertisement

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பதிமூன்றாவது ஐபிஎல் தொடரின்போது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது. ஆனால் இம்முறை பலமாக மீண்டும் வந்துள்ள சிஎஸ்கே அணி இம்முறை முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மற்ற அணிகள் எளிதில் வீழ்த்த முடியாத அணியாக பலம் வாய்ந்த அணியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

csk

இந்த தொடரில் இதுவரை மூன்று முறை மட்டுமே தோற்றுள்ள சிஎஸ்கே அணி தற்போது வரை புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அது மட்டுமின்றி நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு அணி இறுதிப் போட்டியில் விளையாடும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை யாதெனில் தோனியின் மோசமான பேட்டிங் பார்ம் தான் என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது ரசிகர்கள் மற்றொரு குறையும் சென்னை அணியில் இருந்து கண்டுபிடித்து கூறியுள்ளனர். அதன்படி அணியின் சீனியர் வீரரான சுரேஷ் ரெய்னா இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 160 ரன்களை மட்டுமே அடித்துள்ளதாகவும், முக்கியமான நேரத்தில் அடிக்க வேண்டிய இடத்தில் ரெய்னா ஆட்டமிழந்து வெளியேறுவதால் அணியின் ஸ்கோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

raina 1

மேலும் சுரேஷ் ரெய்னாவை எஞ்சியுள்ள சில போட்டிகளில் நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக இளம் வீரர்களை அந்த இடத்தில் விளையாட வைக்கும்போது போட்டியில் இன்னும் சுவாரசியம் இருக்கும் என்றும் நிச்சயம் அந்த முடிவு கை கொடுக்கும் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 19 பந்துகளில் 50 ரன்கள் குவித்த 19 வயது இளம்வீரருக்கு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்த தோனி – வைரலாகும் புகைப்படம்

வழக்கமாக சிஎஸ்கே அணிக்கு 3வது வீரராக களமிறங்கி அதிரடி காட்டும் ரெய்னா கடந்த சீசனில் அணியில் இடம்பெறாமல் தற்போது இந்த ஆண்டு மீண்டும் இணைந்து வெவ்வேறு இடங்களில் இறங்கி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement