19 பந்துகளில் 50 ரன்கள் குவித்த 19 வயது இளம்வீரருக்கு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்த தோனி – வைரலாகும் புகைப்படம்

Jaiswal-4
Jaiswal Dhoni
- Advertisement -

அபுதாபி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது ருதுராஜ் கெய்க்வாட் அபார சதம் காரணமாகவும், ஜடேஜாவின் சிறப்பான ஃபினிஷிங் காரணமாகவும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிச்சயம் சிஎஸ்கே அணியிடம் தோற்று விடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

cskvsrr

- Advertisement -

ஆனால் துவக்கம் முதலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி காட்டினர். மேலும் அந்த அணிக்காக விளையாடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட இறுதியில் ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 190 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் காரணமாக அமைந்தது.

ஏனெனில் 5.2 ஓவர்களிலேயே 77 ரன்களை அவர்கள் முதல் விக்கெட்டுக்கு குவித்தனர். சரியாக பவர் பிளே முடிந்து முதல் பந்தில் ஆட்டமிழந்த ஜெய்ஸ்வால் இருபத்தி ஒரு பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக அவர்கள் பவர் பிளேவியிலேயே 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் குவித்தனர்.

jaiswal
jaiswal RR

இந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜெய்ஸ்வாலின் இந்த அதிரடியான அரைசதம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஜெய்ஸ்வால் கூறுகையில் : நாங்கள் சேசிங்கிற்கு தயாராகும் போது நிச்சயம் இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நம்பினேன். அதன்படி இந்த போட்டியில் களம் இறங்கியது முதல் அதிரடியாக விளையாட வேண்டும் என்றே நினைத்தேன்.

- Advertisement -
jaiswal 3
jaiswal gift

அதற்கேற்ற மாதிரி மைதானமும் கைகொடுத்ததால் என்னால் அதிரடியாக விளையாட முடிந்தது. அது மட்டுமின்றி லூஸ் டெலிவரி கள் கிடைத்தால் நிச்சயம் சிக்ஸர் விளாச வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருந்தது. அதன்படியே சிறப்பாக விளையாடி எங்கள் அணிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை அளித்தேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த போட்டி முடிந்த பின்னர் மகேந்திர சிங் தோனி தனது பேட்டியில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.

இதையும் படிங்க : ராயுடு கொடுத்த வாய்ப்பின் மூலம் சி.ஸ்.கே அணிக்கெதிராக சாதனையை நிகழ்த்திய – யாஷஷ்வி ஜெய்ஷ்வால்

அவர் அளித்த இந்த பரிசை என்னால் மறக்கவே முடியாது. இது என் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத தருணம் என்றும் ஜெய்ஸ்வால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தோனி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த அந்தப் பேட்டுடன் அவர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement